பார்லி.,க்கு புதிய கட்டடம் சபாநாயகர் ஓம்பிர்லா விளக்கம்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
''புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் முடிவு, மத்திய அரசின் முடிவு மட்டுமல்ல; பார்லிமென்ட்டின் இருசபைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டே, பணிகள் துவங்கியுள்ளன,'' என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.லோக்சபா சபாநாயகராக ஓம்பிர்லா பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்நிலையில்,
 பார்லி., புதிய கட்டடம் , ஓம்பிர்லா விளக்கம்

''புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் முடிவு, மத்திய அரசின் முடிவு மட்டுமல்ல; பார்லிமென்ட்டின் இருசபைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டே, பணிகள் துவங்கியுள்ளன,'' என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.

லோக்சபா சபாநாயகராக ஓம்பிர்லா பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்நிலையில், டில்லியில், சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது:


latest tamil news



எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என்பதே ஜனநாயகம். என் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் எல்லாமே, இந்த அடிப்படையில்தான் அமைந்து உள்ளன.ஒரு கட்சிக்கென ஒரே ஒரு எம்.பி., மட்டுமே இருந்தாலும், அவருக்கு உரிய மரியாதை அளிக்கிறேன். அவருக்கும் போதுமான நேரம் ஒதுக்கி பேசுவதற்கு அனுமதி வழங்குகிறேன்.பார்லி., நிலைக்குழு கூட்டங்களை ஆன்லைனி லேயே நடத்த வேண்டுமென சில தலைவர்கள் கேட்கின்றனர். இதுகுறித்து சபை விதிமுறைகளின்படியே ஆய்வு செய்து முடிவு எடுக்க முடியும்.
புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட வேண்டுமென, இரு சபைகளிலும், மத்திய அரசிடம் அனைத்து எம்.பி.,க்களும் கோரிக்கை வைத்தனர்; அது ஏற்கப்பட்டு, அதன்பிறகே புதிய கட்டடம் கட்டும் நடவடிக்கை துவங்கியது.

இது, மத்திய அரசு மட்டுமே எடுத்த முடிவு என கூறிவிட முடியாது.லோக் ஜன சக்தி கட்சியின் எம்.பி.,க்கள் தங்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறி, லோக்சபா செயலகத்தில் கடிதம் தந்துள்ளனர். அதை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
20-ஜூன்-202114:01:03 IST Report Abuse
sahayadhas பாவிங்களா Petrol ல 5 ரூ குறைகல கஷ்டம். ரூ 4200 கோடி விமானம், இப்ப இந்த பங்களா? ெஜய் ஹிராம்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
20-ஜூன்-202111:10:49 IST Report Abuse
sahayadhas Petrol ல 5 ரு ஜனங்களுக்கு குறைக்க வழியில்ல 13 ரூ பங்களா கட்ட பணம் இருக்கா?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
20-ஜூன்-202110:31:19 IST Report Abuse
vbs manian மோடிக்காக கட்டப்படும் வீடு அல்ல. பிரதமருக்காக கட்டப்படும் வீடு. கழகண்மணி பிரதமரானால் அவரும் அங்கு வசிக்கலாம். மோடியின் சகோதரர்கள் எள் ஐ சி கமிஷன் ஏஜென்ட் பேட்டி கடை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் நினைத்து கூட பார்க்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X