பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு பேரை கவர்னர் விடுவிக்க மாட்டார்

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை சம்பவத்தின் போது, குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 15 பேர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, 'கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கக் கூடாது' என, கோரிக்கை மனு அளித்துள்ளனர்.அப்போது, 'நியாயமானதை செய்வேன்' என, கவர்னர் கூறியுள்ளார்.ஆயுள் தண்டனைபாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து அழைத்து சென்ற,
 ஏழு பேரை கவர்னர் விடுவிக்க மாட்டார்

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை சம்பவத்தின் போது, குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 15 பேர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, 'கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கக் கூடாது' என, கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அப்போது, 'நியாயமானதை செய்வேன்' என, கவர்னர் கூறியுள்ளார்.


ஆயுள் தண்டனை



பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து அழைத்து சென்ற, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் அனுசுயா அளித்த பேட்டி:ராஜிவை கொல்வதற்காக நடந்த குண்டு வெடிப்பில், அவர் மட்டும் இறக்கவில்லை. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், கட்சி தொண்டர்கள் என, பலர் இறந்துள்ளனர். அப்படி பார்க்கையில் நடந்தது ஒரு கொலை அல்ல. பல கொலைகளை புரிந்தவர்கள் என்பதால் தான், உச்ச நீதிமன்றம், கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியது. பின், கருணை அடிப்படையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திராவை கொன்றவர்களுக்கு துாக்கு தண்டனை கொடுக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.ஆனால், ராஜிவ் கொலையாளிகளுக்கு மட்டும், ஏன் இத்தனை துாரத்துக்கு கருணை காட்டப்படுகிறது என, புரியவில்லை. எங்கிருந்து வந்தது பணம்?கூலிக்கு ஆட்களை கொலை செய்யும், இவர்களின் வாழ்க்கை தராதரமே, ராஜிவை கொலை செய்து விட்டு சிறைக்கு போன பின் தான் உயருகிறது. அப்படியென்றால், இவர்கள் கூலிக்காக கொலை செய்தவர்கள் தான். அவர்கள் மீது யாரும் இரக்கமோ, கருணையோ காட்ட வேண்டியதில்லை.


latest tamil news



இப்போது, தாங்கள் நிரபராதி என்று பேசும், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தங்கள் தரப்பை, டில்லி உச்ச நீதிமன்றத்தில் கூறி இருக்கலாமே. அதை விட்டு விட்டு, இப்போது, தியாக பிள்ளையை பெற்றது போல நியாய, தர்மம் பேசுகிறார்.ராஜிவ் கொலையாளிகள்அவ்வளவு பேரும், ஜெயிலுக்குள் சொகுசு வாழ்க்கை தான் வாழ்கின்றனர். குடும்ப நிகழ்ச்சிகளுக்கு, 'பரோல்' கேட்டு வெளியே போகின்றனர். விடுதியில் வாழ்வதை போல வாழ்கின்றனர்.

சிறையில் இருக்கும் இவர்கள், உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நடத்த, பல லட்சம் ரூபாயை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும். அதற்கு அவர்களுக்கு, எங்கே இருந்து வந்தது பணம்?


விடுவிக்க கூடாது



ராஜிவ் கொலை நடந்த போது, இக்பால் என்ற எஸ்.பி.,யும் கொல்லப்பட்டார். அவரது மகள் ஒருவரை தவிர, மொத்த குடும்பத்தினரும் இறந்து போய் விட்டனர். அமெரிக்காவில் இருந்து, இக்பால் மகள், என்னிடம் பேசி வருகிறார். அந்த பெண்ணின் கதறலை, என்னால் தாங்க முடியவில்லை.யார் என்ன கரடியாக கத்தினாலும், கவர்னர் பன்வாரிலால் நியாயத்தின் வழி நின்று, கொலையாளிகள் ஏழு பேரையும், எக்காரணம் கொண்டும் விடுவிக்க கூடாது.


நியாயத்தின் பக்கம்



துாத்துக்குடி, சாத்தான்குளத்தில் போலீசார், ஜென்னிக்ஸ், ஜெயராஜ் என்ற இருவரை கொன்றனர். உடனே, பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி, ஜென்னிக்ஸ், ஜெயராஜ் குடும்பத்தினருக்கு, கட்சியினர் லட்சம் லட்சமாக நிவாரண உதவி வழங்கினர். அரசும், அவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு வேலை கொடுத்தது. ஆனால், இன்று வரை, ராஜிவ் படுகொலையின் போது சிக்கி உயிர் பிழைத்தவர் குடும்பத்தினர், என்ன ஆனார்கள் என, யாரும் வந்து பார்க்கவில்லை; எந்த உதவியும் செய்யவில்லை. எங்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வேண்டாம். நியாயத்தின் பக்கம் நின்றால் போதும். இவ்வாறு அனுசுயா கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
26-ஜூன்-202115:19:12 IST Report Abuse
r.sundaram ஏன் கருணை காட்டப்பட்டது என்பதையும் விசாரிக்க வேண்டும். கருணை மணுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதிக்கப்பட்டது ஏன்? அதனால்தானே அவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டது. இதற்க்கு காங்கிரஸ் பதில் சொல்லுமா?
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
25-ஜூன்-202112:09:40 IST Report Abuse
Murthy இவர்கள் கொலை செய்தார்களா? அல்லது கொலைக்கு தெரியாமல் உடந்தையானார்களா? அப்படியென்றால் ஒற்றைக்கண் சிவராசன் யார்? நேரடியாக கொலை செய்தவர்கள் தப்பிவிட்டார்கள்....இன்னமும் ஆர்.கே நாராயணன் ஏன் அந்த வீடியோவை வெளியிடவில்லை?
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
24-ஜூன்-202114:28:51 IST Report Abuse
ponssasi உங்களின் வாதத்தை நான் ஏற்கிறேன், உங்கள் கூற்றுப்படி இவர்கள் கூலிக்கு கொலைசெய்துள்ளனர் என்றால் நிஜ குற்றவாளி தண்டிக்க படாதது ஏன்? அவர் யார்? சிறையில் உள்ளவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என்றால் அது சிறை நிவாகத்தின் தவறு, நீங்கள் நீதிமன்றம் செல்லலாம், இவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துதான், விசாரணை அதிகாரி பேரறிவாளன் கூறியதை நான் மாற்றி எழுதியதால் தான் அவன் தண்டிக்கப்பட்டான், என் மனசாட்சி என்னை உலுக்குகிறது என்று கூறும்போது விசாரணை எப்படி நேர்மையாக நடந்திருக்கும், இந்திரா கொல்லப்பட்டது அவரின் நேரடி பாதுகாவலர்களால், அவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர் அதில் குற்றம் செய்தவர்கள் நேரடியாக தண்டிக்கப்பட்டனர் இவர்கள் (பேரறிவாளன் ) அப்படி இல்லை. நீங்கள் ஆளுநரை சந்தித்ததை குறிகூறவில்லை நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர், நீங்கள் ராஜீவ் கொலை வழக்கு சர்வதேச விசாரணை விரைந்து முடித்து குற்றவாளியை அடையாளம் காட்டுமாறு கேட்டிருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X