சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச பேச்சால் கோடிகளை குவித்தோம்: 'பப்ஜி' மதன்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
சென்னை :'ஆன்லைன்' விளையாட்டு வாயிலாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் மனதில் விஷத்தை விதைத்த 'யு டியூபர்' மதன், போலீசாரிடம் ஆபாசமாக பேசி நடித்துக் காட்டினார். ஆபாச பேச்சுடன் 'பப்ஜி' என்ற ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த மதன், 29, இவரது மனைவி கிருத்திகா, 25, ஆகியோரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்; இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஆபாச பேச்சு ,கோடி,போலீஸ், 'பப்ஜி' மதன்!

சென்னை :'ஆன்லைன்' விளையாட்டு வாயிலாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் மனதில் விஷத்தை விதைத்த 'யு டியூபர்' மதன், போலீசாரிடம் ஆபாசமாக பேசி நடித்துக் காட்டினார். ஆபாச பேச்சுடன் 'பப்ஜி' என்ற ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த மதன், 29, இவரது மனைவி கிருத்திகா, 25, ஆகியோரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்; இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கிருத்திகாவுடன், எட்டு மாத குழந்தையும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் தன்னிடம் விடிய விடிய விசாரணை நடத்திய போலீசாரிடம், மதன் ஆபாசமாக பேசி நடித்துக் காட்டினார். அப்போது அவர் அளித்துள்ளவாக்குமூலம்:கிருத்திகாவும் நானும் காதலித்து மணந்தோம். குறுகிய காலத்தில், கோடீஸ்வரர்களாக வேண்டும் என்பதே எங்கள் திட்டம். அதற்காக, சென்னை அம்பத்துாரில் ஓட்டல் துவங்கினோம்; நஷ்டம் ஏற்பட்டது.கிருத்திகா தான், யு டியூப் சேனல் துவங்கலாம் என்றார். அதன்படி, 'பப்ஜி மதன் கேர்ள்; மதன் 18 பிளஸ்' என, பல பெயர்களில், சேனல் துவங்கினோம்.


நேரடி ஒளிபரப்பு



எளிதில் அடையாளம் காண முடியாத வகையில், வி.பி.என்., என்ற தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு, அவற்றை எங்களின் யு டியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்தோம். எங்கள் சேனலை எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்க்கின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, ஆபாச பேச்சு என்ற மூலதனத்தை கையில் எடுத்தோம்.'ஆன்லைன்' விளையாட்டின் போது, அதிலுள்ள கதாபாத்திரங்களுக்கு, நான் பின்னணி குரல் கொடுப்பேன். அப்போது, பெண்களின் அந்தரங்க உறுப்பு பற்றி பேசுவேன். எதிர்முனையில் விளையாடும் என் மனைவியும் ஆபாசமாக பேசி, கிளுகிளுப்பை
ஏற்படுத்துவார்.கிருத்திகாவின் பேச்சை நம்பி, மற்ற பெண்களும் ஆபாசமாக பேசினர். இதனால், ஆன்லைன் விளையாட்டு சேனல்களில் 'நம்பர் - 1' இடத்தை பிடித்தோம். எங்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில் 2 'ஆடி' கார்கள், சென்னை, சேலத்தில் சொகுசு பங்களாக்கள் வாங்கினோம்.மூன்று ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் வரை குவித்தோம். ஆடி கார்களில் உலா வருவது, நட்சத்திர ஓட்டலில் தங்குவது என, உல்லாசமாக வாழ்ந்து வந்தோம். எங்கள் வங்கி கணக்கில் 4 கோடி ரூபாய் இருப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வரி ஏய்ப்பு



கோடிக்கணக்கில் குவித்துள்ள மதன், கிருத்திகா ஆகியோர், வருமான வரி தாக்கல் செய்யாமல், ஏமாற்றி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் என போலீசார், வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதி உள்ளனர். மதனிடம் நேற்று, குரல் பரிசோதனை செய்யப்பட்டு, இவரது ஆபாச பேச்சு பற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருத்திகா, மதன் ஆகியோரிடம், பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், கணினி, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள், தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan - Marthandam, Nagercoil,இந்தியா
23-ஜூன்-202117:30:38 IST Report Abuse
Radhakrishnan ஒரு வீடு வாங்கிட்டு அந்த லோன் கட்ட படுற பாடு நமக்கு தான் தெரியும். மூன்று வருடத்தில் 75 கோடி என்பது நம்ப தகுந்தமாரி தெரியலே. சும்மா எங்கல வெறுப்பேத்த அடிச்சு விடுறீங்களா.
Rate this:
Cancel
Srinivasan - Bangalore,இந்தியா
21-ஜூன்-202112:20:42 IST Report Abuse
Srinivasan "ஒரு இருபதாயிரம் ருபாய் இருந்தால், என் பையனை காலேஜில் படிக்க வெச்சுருப்பேன்", "ஒரு அம்பதாயிரம் ருபாய் இருந்தால், என் கணவனுக்கு ஆபரேஷன் செய்து, உயிரை காப்பாத்தி இருப்பேன்" - என்று கதறும் மனிதர்களுக்கிடையே, casual-ஆக 3 வருஷத்தில் 75 கோடி சம்பாதிக்க முடியுதுன்னா - இந்த உலகம் என்னடா சாமி...? எனக்கு இந்த உலகம் பிடிக்கல.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
21-ஜூன்-202112:11:27 IST Report Abuse
S.P. Barucha இனி பித்துபிடித்து அலையவேண்டியதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X