நாளை முதல் பஸ்கள் ஓடும் : இன்று வெளியாகிறது அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் பஸ்கள் ஓடும் : இன்று வெளியாகிறது அறிவிப்பு

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (11)
Share
சென்னை :தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து நாளை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, 50 சதவீத பஸ்களைஇயக்குவது உள்ளிட்ட, மேலும் சில தளர்வுகள் இன்று அறிவிக்கப்படலாம். தமிழகத்தில் கொரோனா நோய்பரவலை தடுக்க, மே 24ம் தேதி முதல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.நோய் பரவல் குறையத் துவங்கியதை தொடர்ந்து, அத்தியாவசிய
நாளை , பஸ்கள் ஓடும், அறிவிப்பு

சென்னை :தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து நாளை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, 50 சதவீத பஸ்களை
இயக்குவது உள்ளிட்ட, மேலும் சில தளர்வுகள் இன்று அறிவிக்கப்படலாம்.

தமிழகத்தில் கொரோனா நோய்பரவலை தடுக்க, மே 24ம் தேதி முதல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.நோய் பரவல் குறையத் துவங்கியதை தொடர்ந்து, அத்தியாவசிய பணிகளுக்காக, சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

கடந்த, 14ம் தேதி முதல், 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தொற்று குறைந்த ௨௭ மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டன.அதே நேரத்தில், நோய் தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய, ௧௧ மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன.


எதிர்பார்ப்புஇந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ௨௭ மாவட்டங்களில், அழகு நிலையங்கள், சலுான்கள் திறக்கப்பட்டுள்ளன.டீக்கடைகள் மற்றும் உணவகங்களில், 'பார்சல்' சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 'டாஸ்மாக்' கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, தினசரி நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 35 ஆயிரத்துக்கு மேல் இருந்தது.தற்போது, தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, ௯,௦௦௦த்துக்கு கீழ் குறைந்து விட்டது. எனவே, மேலும் சில தளர்வுகளை, அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையை, அரசு மீண்டும் துவங்கும் என, அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் அறிவிப்பு மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக, மருத்துவ வல்லுனர் குழுவினருடனான கலந்தாலோசனை கூட்டம், நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் பிரதீப் கவுர் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


வழிகாட்டுதல்கள்உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், வேலுார் கிறிஸ்துவ மருத்துவக் கல்வி இயக்குனர் பீட்டர் உட்பட பலர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், கொரோனா நோய் தொற்று குறைந்த மாவட்டங்களில், 50 சதவீத பயணியருடன் பஸ்களை இயக்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி, முதல் கட்டமாக50 சதவீத அளவுக்கு பஸ்களை இயக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.அதேபோல, பெரிய வணிக நிறுவனங்களை திறக்கவும், வணிகர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கவும், சிறிய கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கவும், மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.


பரிந்துரைகள்இக்கூட்டம் முடிந்த பின், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அதிகாரிகள் கூட்டம் நடந்தது.தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி., திரிபாதி மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில், மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் பற்றியும், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை, தளர்வுகள் அறிவிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட மேலும் சில தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு, இன்று காலை வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X