உயர் நீதிமன்றங்களில் 58 லட்சம் வழக்குகள் தேக்கம்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
முன் எப்போதும் இல்லாத அளவில் நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில், 430 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் உயர் நீதிமன்றங்களில் 58 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன.உயர் நீதிமன்றங்களில் மூன்றில் இரண்டு பங்கு நீதிபதி பணியிடங்கள், அங்கு பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயிலாக நிரப்பப்படுகின்றன. ஆனால், வழக்கறிஞர்கள் பலர் நீதிபதிகளாக
உயர் நீதிமன்றங்கள்  58 லட்சம் வழக்குகள் தேக்கம்

முன் எப்போதும் இல்லாத அளவில் நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில், 430 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால் உயர் நீதிமன்றங்களில் 58 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன.உயர் நீதிமன்றங்களில் மூன்றில் இரண்டு பங்கு நீதிபதி பணியிடங்கள், அங்கு பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயிலாக நிரப்பப்படுகின்றன. ஆனால், வழக்கறிஞர்கள் பலர் நீதிபதிகளாக விரும்புவதில்லை.தேவையின்றி அரசுக்கும், நீதித் துறைக்கும் நடக்கும் மோதலில் தாங்கள் இடம் பெறுவதை தவிர்க்கவே அவர்கள் விரும்புகின்றனர். இதற்கு சில காரணங்களும் உள்ளன.இடமாற்றம்டில்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக, மனிதநேய அடிப்படையில் உத்தரவு பிறப்பித்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர், இரவோடு இரவாக இடமாற்றம் செய்யப்பட்டார். டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, வழக்கறிஞர் சவுரவ் கிருபால், 2017ல் பரிந்துரைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இது பற்றி மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கு, அவர் மீது கூறப்படும் ஒரு புகார் காரணம் என கூறப்படுகிறது.கடந்த, 2014ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாரிமன், அருண் மிஸ்ரா, கோபால் சுப்ரமணியம், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோரை நியமிக்க, மத்திய அரசுக்கு 'கொலிஜியம்' பரிந்துரைத்தது.
இதில் கோபால் சுப்ரமணியத்தை தவிர, மற்றவர்களை நீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


வழக்குகள் தேக்கம்கோபால் சுப்ரமணியத்தை மத்திய அரசு நிராகரித்ததற்கு, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார். எனினும் நீதிபதியாக விரும்பவில்லை என, கோபால் சுப்ரமணியமே அறிவித்துவிட்டார். இப்படிப்பட்ட பல காரணங்களால், நீதிபதிகளாவதை பல வழக்கறிஞர்கள் விரும்புவதில்லை. இதனால், உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதி பணியிடங்கள் காலியாகவே உள்ளன. நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை, 1,080. கடந்த 1ம் தேதி வரை எடுத்த கணக்கின்படி, இதில், 430 இடங்கள் காலியாக உள்ளன.


இதனால், ஏராளமான வழக்குகள் விசாரிக்க முடியாமல் மலை போல் தேங்கியுள்ளன. நாடு முழுதும் உயர் நீதிமன்றங்களில், 58 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும், 5.8 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. இதில், 13 சதவீத வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கேரள உயர் நீதிமன்றத்தில், 2.21 லட்சம்; கர்நாடக உயர் நீதிமன்றத்தில், 2.88 லட்சம்; தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில், 2.4 லட்சம் வழங்குகள் தேங்கியுள்ளன.


கட்ட பஞ்சாயத்துஇந்த நிலை நீடித்தால், 'பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை நாடுவதை விட, கட்ட பஞ்சாயத்துகளை நாடினால் உடனடி தீர்ப்பு கிடைக்கும்' என, மக்கள் கருத இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதே, சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அதனால், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பி, வழக்குகளை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagaraj - Doha,கத்தார்
20-ஜூன்-202121:25:18 IST Report Abuse
Nagaraj மிகவும் கவலை அளிக்க கூடிய பதிவு
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
20-ஜூன்-202117:54:54 IST Report Abuse
a natanasabapathy பைசாவுக்கு புண்ணியம் இல்லாத வழக்குகளை எல்லாம் விசாரணைக்கு எடுத்து கொள்கிறீர்கள் வாய்தா மேல் வாய்தாவாக வழங்கி 20 வருடத்துக்கு வழக்குகளை இழுத்து அடிக்கிறீர்கள் ஒருவர் மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் நான் பெயிலபில் வாரண்ட் வழங்கி கைதுசெய்யவேண்டும் இல்லையெனில் ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள் சம்பளம் பதவி உயர்வு சம்பந்தமாக வழக்கு போட்டு தீர்ப்பு வழங்கும்போது அதுவழக்கு போட்டவருக்கு மட்டும் அல்லாது அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவிக்க வேண்டும் இப்போது பாதிக்கப்பட்டவர்கள் தனி தனியாக வழக்கு போடவேண்டும் என்று கூறுகிறார்கள் இதனால் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகின்றன இவை தவிர்க்கபடவேண்டும்
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
20-ஜூன்-202116:43:45 IST Report Abuse
V Gopalan Inspite of the country facing Pandemic and entire offices including court too observed full closure but they have availed Summer vacation. Giving adjournments/bail especially for the corrupt politicians if they deny, certainly the number of cases will come down.. Go on giving adjournments it is similar to river without any check dams flowing into ocean, the litigants will become a pauper only advocates will get benefit.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X