எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'மாஜி'க்கள் மீது ஊழல் வழக்கு? ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை தோண்டி எடுக்கும் பணியை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் துவக்கி உள்ளனர். விரைவில், பல முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் பாய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., ஆட்சி யில், முதல்வராக இருந்த இ.பி.எஸ்., வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவரது அமைச்சர்கள் பல்வேறு ஊழல்கள்
மாஜி'க்கள் மீது ஊழல் வழக்கு ,ஆதாரங்கள் , பணி தீவிரம்!

அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை தோண்டி எடுக்கும் பணியை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் துவக்கி உள்ளனர். விரைவில், பல முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் பாய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., ஆட்சி யில், முதல்வராக இருந்த இ.பி.எஸ்., வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவரது அமைச்சர்கள் பல்வேறு ஊழல்கள் செய்துள்ளதாகவும், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த, ஸ்டாலின் குற்றம் சுமத்தினார்.


97 பக்க மனுமேலும், இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, 97 பக்க மனுவை, 2020 டிசம்பர் 22ல், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கினார்.மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த அமைச்சர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார்.சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது; ஸ்டாலின் முதல்வரானார். கொரோனா பரவல் அதிகரித்ததால், அதை கட்டுப்படுத்தும் பணியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஈடுபட்டனர்.தற்போது, கொரோனா பரவல் குறையத் துவங்கி உள்ளது. எனவே, துறை ரீதியான நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமியிடம், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.


வாய்மொழி உத்தரவுமேலும், அமைச்சர்களிடமும், அவர்கள் துறைகளில் நடந்த முறைகேடு, ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து, கந்தசாமியிடம் வழங்கவும், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., வசமிருந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறையில் நடந்த ஊழல் குறித்த விபரங்களை, தோண்டி எடுக்கும் பணியும் நடந்து வருகிறது.அதேபோல், 'பாரத் நெட் டெண்டரில்' நடந்த முறைகேடுகள்; உணவு தானியங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடுகள்; உள்ளாட்சி துறையில் நடந்துள்ள ஊழல்கள்; மீன் வளத்துறையில் 'வாக்கி டாக்கி' ஊழல்.


வாய்ப்புசுகாதாரத் துறையில் கொரோனா சிகிச்சை மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் போன்றவை குறித்த விபரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனைத்து துறைகளிலும், கடந்த ஆட்சியில், எந்த திட்டங்களில் எல்லாம் ஊழல் நடந்தது என்ற விசாரணை நடந்து வருகிறது.'சில ஊழல் தொடர்பான ஆவணங்கள், லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின், வழக்கு தொடர வாய்ப்புள்ளது' என்றனர்.- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanghi -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-202112:42:21 IST Report Abuse
Sanghi போடுங்க எல்லா அதிமுக அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளனர். பால் ஊழல் பாலாஜி, உள்ளாட்சி துறை வேலுமணி, மின்சாரம் தங்கமணி, உணவு துறை காமராஜ், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை முதலமைச்சராக இருந்த எடப்பாடி, நிதி OPS, ரமணா வணிகவரித்துறை, போக்குவரத்து விஜயபாஸ்கர், சுகாதாரம் விஜயபாஸ்கர் எல்லோரும் கோடிகளில் லஞ்சம் செய்து வருமானம் ஈட்டி உள்ளனர். அது சரி, தற்போது சில திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளதே அதை ரத்து செய்து விடுவீர்களா? முன்னாள் மற்றும் தற்போதய திமுக அமைச்சர்கள் பலருக்கு ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள், சாராய ஆலைகள், வணிக நிறுவனங்கள், மால்கள், குடிதண்ணீர் ஆலைகள், அரிசி ஆலைகள், பால் நிறுவனங்கள், மசாலா நிறுவனங்கள், நட்சத்திர மருத்துவ மனைகள், வெளிநாட்டில் தீவுகள், நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், ECR ல் நூற்றுக்கணக்கான மாடமாளிகை பங்களாக்கள், OMR ல் பங்களாக்கள், ஒரகடத்தில் நிறுவனங்கள் மற்றும் ஏக்கர் கணக்கில் நிலங்கள், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஊட்டியில் விலை உயர்ந்த பங்களாக்கள், ஆயிரக்கணக்கில் ஆம்னி பேருந் துகள், TV Channel கள் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் | மருந்து கம்பெனிகள்......அப்பப்பா.....எழுத முடியவில்லை முடிவும் இல்லை..............இவைகள் எல்லாம் என்ன அவர்களுடைய முப்பாட்டனார் சொத்தா? ஆசியாவிலேயே முதல் பணக்கார குடும்பம் என்ற இடத்தை பிடிக்கப் போகும் முதலமைச்சர் குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் சொத்துக்கள் எப்படி வந்தன. அதையும் விஜாரிக்க வேண்டாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X