'காங்., பற்ற வைத்தது இன்று எரிகிறது!'

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (76) | |
Advertisement
எண்ணெய் கடன் பத்திரங்களுக்காக இந்த ஆண்டு, மத்திய அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். அன்று, காங்கிரஸ்தலைமையிலான கூட்டணி அரசு செய்த தவறுக்கு, இன்று பா.ஜ., ஆட்சி பரிகாரம் தேட வேண்டியிருக்கிறது என்கின்றனர், எண்ணெய் துறை வல்லுனர்கள்.ஒரு பக்கம், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என, உரத்த குரல் எழுப்பும் காங்கிரஸ், தன் ஆட்சி காலத்தில்
காங்., பற்ற வைத்தது இன்று எரிகிறது!'

எண்ணெய் கடன் பத்திரங்களுக்காக இந்த ஆண்டு, மத்திய அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். அன்று, காங்கிரஸ்தலைமையிலான கூட்டணி அரசு செய்த தவறுக்கு, இன்று பா.ஜ., ஆட்சி பரிகாரம் தேட வேண்டியிருக்கிறது என்கின்றனர், எண்ணெய் துறை வல்லுனர்கள்.
ஒரு பக்கம், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என, உரத்த குரல் எழுப்பும் காங்கிரஸ், தன் ஆட்சி காலத்தில் செய்த பிழையை திரும்பி பார்க்க மறுக்கிறது.

கடந்த, 2005 -- 06 முதல், 2008 -- 09 நிதியாண்டுகள் இடையே, காங்கிரஸ் அரசு, 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய் கடன் பத்திரங்களை வெளியிட்டது.


கடும் நிதி நெருக்கடிஅதாவது, அப்போது செயற்கையாக பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பியது ஐ.மு.கூ., அரசு. வெளிநாட்டில் இருந்து கூடுதல் விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட விலையில், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது.இதனால், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடின. அவற்றால், உற்பத்தி செலவை கூட திரும்ப பெற முடியவில்லை. அந்த சமயத்தில் தான், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கடன்களை சீர்செய்ய, எண்ணெய் கடன் பத்திரங்களை வெளியிட்டது, அப்போதைய காங்கிரஸ் அரசு.அதாவது, அவை அடைந்த நஷ்டத்துக்கு ஈடாக பணமாக கொடுக்காமல், கடன் பத்திரங்களை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது.


தனியார் நிறுவன முதலீடுஅதுதான் இப்போது, நம் தலை மீது சுமையாக வந்து விடிகிறது. மார்ச், 2015ல், 3,500 கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய் பத்திரங்கள் முதிர்வடைந்தன. அதன் பின், இந்த ஆண்டு, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பத்திரங்கள் முதிர்வடைய உள்ளன. இவற்றுக்கு வட்டி இன்னொரு, 10 ஆயிரம் கோடி ரூபாய். ஆக மொத்தம் 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவை.

கடந்த பட்ஜெட்டில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரங்களில், 'மியூச்சுவல் பண்டு' நிறுவனங்களும், தனியார் முதலீட்டாளர்களும் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு உரிய தேதியில் பணத்தை திருப்பித்தர வேண்டும். இல்லையெனில், இந்திய அரசுக்கே அவமானம். அதன் தரமதிப்பீடு சர்வதேச சந்தையில் சிதைந்து போய்விடும். அதனால், முதிர்வு தொகை இந்த ஆண்டு அக்டோபரிலும், நவம்பரிலும் திரும்ப தரப்படவிருக்கிறது.உண்மைக்கு புறம்பானதுஇது மட்டுமல்ல. 2026 மார்ச் வரை, இன்னும், 10 கடன் பத்திரங்கள் முதிர்வு அடையவுள்ளன.

1.2 லட்சம் கோடி ரூபாய் வரை முதிர்வு தொகையும், அதே அளவுக்கு வட்டியும் சேர்ந்து, திரும்ப வழங்கப்பட வேண்டும்.அன்றைய ஆட்சியாளர்கள், நாங்கள் மக்கள் மீது சுமையை ஏற்றவில்லை என்று சொன்னால், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஏனெனில், அவர்கள்அடுத்த தலைமுறையினர் மீது சுமையை ஏற்றி விட்டு சென்றுள்ளனர்.அன்று பற்ற வைத்தது இன்று எரிகிறது. -- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar s - Chennai,இந்தியா
12-அக்-202116:04:20 IST Report Abuse
Kumar s மனசாட்சியோடு நடக்க வேண்டும் தொலைகாட்ச்சி விவாதங்களில் பங்கேற்கும் எதிர்கட்சி பேச்சாளர்கள் சொல்வது காங்கிஸ்காரர்கள் விட்டு சென்ற கடன் பத்திரங்கள் சுமார் மொத்தமே 1-1/2 லச்சம் கோடி அசலும் வட்டியும் மேலும் ஆளும் அரசு இதுவரை வசூலித்தது சுமார் 20 லட்ச்சம் கோடிகளாேமே இது எந்த ஊர் நியாயம்?
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
22-ஜூன்-202120:48:28 IST Report Abuse
S Bala மக்கள் மீது எந்த சுமையும் வரக்கூடாது ஆனால் வரியும் போடக்கூடாது. மக்கள் ஜனத்தொகை பெருக்கம் மட்டுமே செய்வார்கள் உற்பத்தி திறனில் எந்த பெருக்கமும் இருக்காது. இலவசமாக எல்லாம் வேண்டும் ஆனால் எந்த அதிகப்படி வேலையும் செய்ய மாட்டார்கள். சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் அளவுக்கு தளவாடங்களை வாங்கி குவிக்க வேண்டும் ஆனால் அதற்கு அரசு எந்த வரியையும் அதிகப்படுத்த கூடாது. பெட்ரோல் இரண்டு ரூபாய் கூடினால் ஒரு கிலோமீட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தும் ஆட்டோக்காரன் பெட்ரோல் விலையை பத்து ரூபாய் குறைத்தாலும் வாடகையை ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டான். சாராய விலை தினமும் இருபது ரூபாய் அதிகமானாலும் கொடுப்போம் ஆனால் பெட்ரோல் விலை மாதத்தில் ஒரு ரூபாய் அதிகமானால் கூவுவோம். அனைவருக்கும் தடுப்பூசி வேண்டும், மருத்துவமனை வேண்டும், ஆக்சிஜன் வேண்டும் ஆனால் அனைத்தும் இலவசமாக வேண்டும். இதற்கு பணம்? வரி போட இயலாது. சரி பணம் அதிகமாக அச்சடிப்போம் என்றால் விலைவாசி கூடியதாக அலறுவோம்.
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
21-ஜூன்-202102:05:55 IST Report Abuse
S.kausalya Petrol விலை ஏறி விட்டது. அதனால் மக்கள் மிகவும் sirama படுகிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒரு பொருள் விலை உயர்ந்து விட்டால், அது நமக்கு மிகவும் தேவையானதாக இருந்தால் மட்டுமே, வாங்குவோம். உதாரணம் உணவு பொருட்கள். ஆனால் நம் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மிக அதிகமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே அதன் பயன்பாட்டை சிறிது கூட குரைக்காமல் வாங்கி உபயோகிக்கிறோம்.. ஒரு vip போனால் அவர் பின்னால் குறைந்த பட்சம் 50,60 வாகனங்கள் போகிறது. நல்ல. வேளை புதிய வாகனங்கள் வாங்க வழி இல்லை. கடை மூடி கிடப்பதால், விற்பனை இல்லை லாக் டவுன் காலத்திலும், டிராபிக் ஜாம் ஏற்படுகிறது என்றால் பெட்ரோல் விலை Yetram குறித்து மக்கள் கவலை வில்லை என்று தானே பொருள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X