தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம் எல்லையில் போலீஸ் குவிப்பு

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
ஓசூர் :மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகா - தமிழக எல்லையில் நேற்று பதற்றமான சூழ்நிலை நிலவியதால், தமிழக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் கர்நாடக மாநில அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. அணை கட்ட முயற்சி சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல், அணை கட்ட முயற்சி
மேகதாது அணை,ம் எல்லை, போலீஸ் குவிப்பு

ஓசூர் :மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகா - தமிழக எல்லையில் நேற்று பதற்றமான சூழ்நிலை நிலவியதால், தமிழக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் கர்நாடக மாநில அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.


அணை கட்ட முயற்சி


சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல், அணை கட்ட முயற்சி நடப்பதாக வந்த செய்தியை தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணை நடத்திய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், கர்நாடக மாநில அரசிற்கு பதிலளிக்க உத்தரவிட்டது.
மேலும், மேகதாதுவில் அணை கட்டப்படவுள்ள பகுதியில் ஆய்வு செய்ய நிபுணர் குழுவையும் அமைத்தது.இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்கை முடித்து கொள்வதாக அறிவித்தது; நிபுணர் குழுவும் கலைக்கப்பட்டது.
இதற்கிடையே, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மேகதாது அணை கட்ட, கர்நாடகாவிற்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினார். மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.


பதற்றமான சூழ்நிலைlatest tamil news
இத்திட்டம் இரு மாநில நல்லுறவுக்கு உகந்தது அல்ல என, அறிவித்திருந்தார்.இதனால், கர்நாடகா - தமிழக எல்லையில் நேற்று காலை பதற்றமான சூழ்நிலை உருவானது. மாநில எல்லையில், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்த வாய்ப்பு இருந்தது.
அதனால், கிருஷ்ணகிரி எஸ்.பி., சாய் சரண் தேஜஸ்வி தலைமையில், 60க்கும் மேற்பட்ட போலீசார் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க மாநில எல்லையில் குவிக்கப்பட்டனர்.


மேல் முறையீடு:அமைச்சர் தகவல்''மேகதாது பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். சட்ட அமைச்சர் ரகுபதி நேற்று கூறியதாவது:மேகதாது அணை பிரச்னையில், முதல்வர் உரிய முடிவு எடுப்பார். முதல்வர், அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து ஆலோசித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூறினால், சட்டத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath - Chennai,இந்தியா
20-ஜூன்-202120:54:07 IST Report Abuse
sampath கோ பேக் மோடி இப்போது தேவையா. ஒன்றியம் மத்திய அரசாக மாறுமா
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
20-ஜூன்-202118:04:50 IST Report Abuse
Poongavoor Raghupathy தண்ணீர் பிரச்சனை தமிழ்நாட்டிற்கு புதிதில்லை. எவ்வளவு காலம் தான் பிற மாநிலத்தை நம்பி இருக்க முடியும். தமிழ்நாடு தன்னிறைவுக்காக தண்ணீருக்கு யோசிக்காமல் பிற மாநிலங்களோடு சண்டை போடுவதும் நீதிமன்றங்களுக்கு போவதும் வழக்கமாக உள்ளது. பிற மாநிலங்களை எதிர் பாராமல் பிச்சை எடுக்காமல் தமிழ்நாட்டின் தண்ணீரை மக்களுக்கு எப்படி ஏற்பாடு செய்வதை பார்க்காமல் சண்டை போடுவது மடமையிலும் மடமை திராவிட முன்னேற்ற கட்சிக்கு போராட்டமும் நீதிமன்றமும் தான் தெரிகிறதே ஒழிய தண்ணீரை எப்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற யோஜனை இல்லை.ஸ்டாலின் மேகதாது ப்ரோப்ளேத்தை சரியாக கையளவில்லையெனில் தமிழர்களும் கர்நாடக மக்களும் சண்டையில் தான் போய் முடியும்.கடவுளை நம்பினால் சரியான வேலையில் மழை பெய்து தண்ணீர் கிட்டும். கடவுள் நம்பிக்கையும் திமுகவிற்கு இல்லை. மக்கள் தான் தண்ணீருக்காக கஷ்ட பட போகிறார்களோ என்னவோ. திமுகவின் பகுத்தறிவு சண்டையும் நீதிமன்றமும் தானோ.
Rate this:
Cancel
A P - chennai,இந்தியா
20-ஜூன்-202117:32:11 IST Report Abuse
A P the river Kaveri flows through a deep and narrow gorge. Mekedatu' means 'goat's leap' in கன்னட. கன்னடத்தில் மேகே தாட்டு என்றால் ஆடு தாண்டக்கூடிய அகலமுள்ள ஆறு என்று அர்த்தம். ஆங்கிலத்தில் உச்சரிக்கவேண்டுமானால் maekkae dhaattu என்றுதான் உச்சரிக்க வேண்டும். மேகதாது என்பது அபத்தம். maekkae என்றால் ஆடு மற்றும் dhaattu என்றால் தாண்டு என்று அர்த்தம். இனிமேலாவது சரியாக உச்சரிப்போம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X