தமிழ்நாடு

அவசியம்! கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள....மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை ... பொது மக்கள் ஒத்துழைப்பு

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறினார். அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடலுார் மாவட்டத்தில் முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இது வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 2 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 7
அவசியம்!  கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள....மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை ... பொது மக்கள் ஒத்துழைப்பு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடலுார் மாவட்டத்தில் முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இது வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 2 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக தினமும் 5,000 பேருக்கு மேல் தடுப்பூசி போட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் முன் வர வேண்டும். மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் வட்டார மருத்துவ அலுவலர்கள் கொரோனா தடுப்பு பணி மட்டுமின்றி தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பொது மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட ஒரே நாளில் 13, 000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 8,000 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள கடலுார் மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். குறிப்பாக, குழந்தைகளுக்கு அதிக படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து வர்த்தக நிறுவனங்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். மாவட்டத்தில் தொற்று பரவல் குறைந்து வருகிறது. தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X