கள்ளக்காதலனை வரவழைத்து கணவனை கொன்ற மனைவி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதலனை வரவழைத்து கணவனை கொன்ற மனைவி கைது

Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (20)
Share
சென்னை:கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை தேடுகின்றனர்.சென்னை சைதாப்பேட்டை ஜெயராமன் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி 36; இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வந்தார். மனைவி நிரோஷா 30. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நிரோஷா மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து
 கள்ளக்காதலனை வரவழைத்து கணவனை கொன்ற மனைவி கைது

சென்னை:கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை தேடுகின்றனர்.சென்னை சைதாப்பேட்டை ஜெயராமன் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி 36; இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வந்தார். மனைவி நிரோஷா 30. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நிரோஷா மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து கணவனை வெட்டி கொலை செய்து விட்டதாக கூச்சல் போட்டுள்ளார்.

சைதாப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின் நிரோஷாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் நிரோஷா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரிந்தது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:சில ஆண்டுகளுக்குமுன் கோடம்பாக்கத்தில் வசித்த போது தி.நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நிரோஷா பணி புரிந்தார். அருகில் உள்ள கடையில் திருமணமாகாத மணிகண்டன் 30 டெய்லராக பணிபுரிந்தார்.இருவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கோதண்டபாணி நிரோஷா கடந்தாண்டு சைதாப்பேட்டையில் குடியேறினர். மீண்டும் நிரோஷா மணிகண்டன் இடையே கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. இதை கோதண்டபாணி கண்டித்து உள்ளார்.ஒரு கட்டத்தில் கோதண்டபாணியை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மணிகண்டன் கோதண்டபாணி வீட்டுக்கு சென்றார்.துாங்கி கொண்டிருந்த கோதண்டபாணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடினார்.நிரோஷாவை கைது செய்துள்ளோம். மணிகண்டன் விரைவில் சிக்குவார்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X