சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயில்களை திறக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

Added : ஜூன் 20, 2021
Share
Advertisement
திண்டிவனம்:தமிழகத்தில் ஹிந்து கோயில்களை திறக்கக் கோரி திண்டிவனத்தில் அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் மாநிலச்செயலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் 63; அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர். சந்தைமேடு ராஜகோபால் நகரில் தண்டாயுதபாணி கோயில் அமைத்து நிர்வகித்து வருகிறார்.டாஸ்மாக்
 கோயில்களை திறக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

திண்டிவனம்:தமிழகத்தில் ஹிந்து கோயில்களை திறக்கக் கோரி திண்டிவனத்தில் அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் மாநிலச்செயலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் 63; அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர். சந்தைமேடு ராஜகோபால் நகரில் தண்டாயுதபாணி கோயில் அமைத்து நிர்வகித்து வருகிறார்.டாஸ்மாக் கடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு ஹிந்து கோயில்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் நிர்வகித்து வரும் கோயிலில் நேற்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் 'தமிழக அரசு வழிபாட்டு தலங்களை திறந்தால் நாடு செழிக்கும். மக்கள் நலமோடும் வளமோடும் வாழ்வர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ரோஷணை போலீசில் அனுமதி கேட்டேன். அவர்கள் அனுமதி வழங்கவில்லை.அனுமதியின்றி போராட்டத்தை நடத்துகிறேன். ஹிந்து கோயில்களை விரைந்து திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X