கொரோனா 2வது அலைக்கு பீஹாரில் 75,000 பேர் பலி

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி,: கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில் பீஹாரில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. கொரோனா இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி இறுதியிலிருந்து தீவிரமாக பரவத் துவங்கியது.பீஹாரில் கடந்த ஜனவரி - மே மாதம் வரை
கொரோனா 2வது அலை, பீஹார் ,75,000 பேர் பலி

புதுடில்லி,: கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில் பீஹாரில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. கொரோனா இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி இறுதியிலிருந்து தீவிரமாக பரவத் துவங்கியது.பீஹாரில் கடந்த ஜனவரி - மே மாதம் வரை கொரோனாவுக்கு 7717 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


latest tamil news




பீஹாரில் 2019ம் ஆண்டு ஜனவரி - மே மாதங்களில் 1.3 லட்சம் பேர் இறந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.1 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எதனால் இறந்தனர் என்பது தெரியவில்லை. அதனால் இவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியிருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கடந்த மாதம் மட்டும் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பீஹாரில் எப்போதுமே இறப்புகள் சரியாக பதிவு செய்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. பீஹாரில் மட்டுமல்ல மத்திய பிரதேசம் ஆந்திரா தமிழகம் கர்நாடகா டில்லி ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பலி எண்ணிக்கை குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-202117:19:40 IST Report Abuse
oce தேர்தல் கருத்து கணிப்புகளில் வெளுத்து வாங்கிய நிறுவனங்கள் குரோனா இறப்புக் கணக்கையும் இதுவரை கணிக்க வில்லை. கவனிக்க வில்லையா. அல்வது மறைத்து விட்டார்களா.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
20-ஜூன்-202115:48:50 IST Report Abuse
Vijay D Ratnam தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உண்மையான நிலவரம் என்றால் ரெண்டு லட்சத்தை தாண்டும். ஆனால் ஆர்.எஸ்.பி மீடியாக்கள் படியளக்கும் முதலாளி சொல்வதைத்தான் மக்களிடம் சொல்லும். அவுங்களும் தொழில் பண்ணணும்ல.
Rate this:
Cancel
20-ஜூன்-202114:30:32 IST Report Abuse
மனுநீதி தமிழ்நாட்டில் தற்போது சொன்னதை விட ஏறத்தாழ 5 மடங்கு அதிகமாக உள்ளது. Watch Maridas Answers.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X