சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் ஆக்கிரமித்த 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சிவகங்கை, சிவகங்கையில் கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலம், 9.58 ஏக்கரை ஆக்கிரமித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், பினாமி பெயரில் கட்டிய வணிக வளாகத்திற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக, தஞ்சாவூர்- - பரமக்குடி பைபாஸ் ரோட்டில், 142 ஏக்கர் நிலம்
'மாஜி' அமைச்சர்  ,ஆக்கிரமிப்பு, 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு:

சிவகங்கை, சிவகங்கையில் கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலம், 9.58 ஏக்கரை ஆக்கிரமித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், பினாமி பெயரில் கட்டிய வணிக வளாகத்திற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக, தஞ்சாவூர்- - பரமக்குடி பைபாஸ் ரோட்டில், 142 ஏக்கர் நிலம் காஞ்சிரங்கால் ஊராட்சி, மகாசிவனேந்தல் 'குரூப்'பில் உள்ளது.


ஆக்கிரமிப்புlatest tamil news
ஏற்கனவே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.'மாஜி' அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு புகார்:அ.தி.மு.க., முன்னாள்அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், பினாமி
பெயரில் இக்கோவில் நிலமான, 9.58 ஏக்கரை ஆக்கிரமித்து, முறைகேடாக மின் இணைப்பு பெற்று வணிக வளாகம் கட்டி வருவதாக, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது.நேற்று காலை, 9:00 மணிக்கு ஹிந்து அறநிலைய உதவி கமிஷனர் செல்வி, செயல் அலுவலர் நாகராஜன், தாசில்தார் தர்மலிங்கம் உட்பட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று, ஆக்கிர
மிப்பில் இருந்த வணிக வளாக கட்டடம், காலியிடங்களில் அமைத்திருந்த, 'பென்சிங்' பகுதியை பூட்டி 'சீல்' வைத்தனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை 'போர்டு'ம் வைத்தனர்.அறநிலைய உதவி கமிஷனர் செல்வி கூறியதாவது: ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்குமாறு அரசிடம் இருந்து உத்தரவு வந்தது. இதையடுத்து அந்த இடத்தை ஆய்வு செய்து வணிக வளாகத்திற்கு 'சீல்' வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


எனக்கு சம்பந்தம் இல்லைமுன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது: இந்நில ஆக்கிரமிப்பிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போது, எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் இருந்தேன்.என்னை பிடிக்காத சிலர், அமைச்சர் பினாமி பெயரில் நிலம் ஆக்கிரமித்துள்ளதாக பொய்யான தகவலை பரப்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-ஜூன்-202118:50:41 IST Report Abuse
Girija அப்புறம் ? வணிக வளாகம் சுயம்புவாக முளைத்ததா ? அப்படி ஒரு கட்டிடம் முளைக்க நீங்க காஸு வாங்காமல் அல்லது மக்கள் சேவையில் மெய்மறந்து கவனிக்காமல் இருந்து விட்டீர்களா ? அல்லது சிவகங்கை மக்கள் ஊமைகளா ? ..... .... புன்னாக்கு சொல்லாதே தப்பு கணக்கு .......
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
20-ஜூன்-202111:47:05 IST Report Abuse
M S RAGHUNATHAN DMK வினர் மிக நல்லவர்கள். ஒரு இன்ச் நிலம் கூட ஆக்ரமிக்காதவர்கள். பாவ புண்ணியதிற்கு பயந்தவர்கள். அறிவாலயத்தில் காணிக்கை செலுத்தி இருந்தால் தூய்மையானவர்கள்.
Rate this:
Cancel
INNER VOICE - MUMBAI,இந்தியா
20-ஜூன்-202111:46:27 IST Report Abuse
INNER VOICE கருணாநிதி ஆட்சியிலிருந்து இந்த கோவில் நிலம் மீட்பை ஆரம்பிக்கவும் .தமிழ்நாட்டையே ஆட்டை போட்டவர்கள் ,,,ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X