சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் மருத்துவ கழிவு கூடலுார் மக்கள் அதிர்ச்சி

Added : ஜூன் 20, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கிடந்த, பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து போன்ற மருத்துவ கழிவுகளால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் மாக்கமூலா அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நேற்று, காலை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்திய ஊசி, மருந்து பாட்டில்கள் சாலையோரம் கிடந்தன. நோய் தொற்று அபாயம் ஏற்படும் என்பதால் மக்கள் அச்சம்
 சாலையோரம் மருத்துவ கழிவு  கூடலுார் மக்கள் அதிர்ச்சி

கூடலுார்:கூடலுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கிடந்த, பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து போன்ற மருத்துவ கழிவுகளால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் மாக்கமூலா அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நேற்று, காலை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்திய ஊசி, மருந்து பாட்டில்கள் சாலையோரம் கிடந்தன. நோய் தொற்று அபாயம் ஏற்படும் என்பதால் மக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் அவற்றை எடுத்து சென்றனர்.

கூடலுார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் கூறுகையில்,''சாலையோரம் கிடந்த, பயன்படுத்திய ஊசி, மருந்து பாட்டில்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரித்து, மருத்துவ கழிவுகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X