சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எதிர்பார்த்த மழை இல்லை மின் உற்பத்தியில் சிக்கல்

Added : ஜூன் 20, 2021
Share
Advertisement
ஊட்டி:அவலாஞ்சி, எமரால்டு அணை நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால், மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட எமரால்டு அணை, 184 அடி; அவலாஞ்சி அணை, 171 அடி கொண்டவை. இரண்டும் அணைகளும் மின் உற்பத்திக்கு பிரதான அணைகளாக உள்ளன.இந்த அணை நீர் மூலம், குந்தா நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து,
 எதிர்பார்த்த மழை இல்லை மின் உற்பத்தியில் சிக்கல்

ஊட்டி:அவலாஞ்சி, எமரால்டு அணை நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால், மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட எமரால்டு அணை, 184 அடி; அவலாஞ்சி அணை, 171 அடி கொண்டவை. இரண்டும் அணைகளும் மின் உற்பத்திக்கு பிரதான அணைகளாக உள்ளன.இந்த அணை நீர் மூலம், குந்தா நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து, கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையங்களில் இந்த அணை நீரை கொண்டு இயக்கப்படுகிறது.

பருவமழை தாமதமாக துவங்கி, மூன்று நாட்கள் பெய்த மழையில், இரண்டு அடி வரைக்கு தண்ணீர் உயர்ந்துள்ளது. அவலாஞ்சி, எமரால்டு அணை நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.தற்போது இரண்டு நாட்களாக மழை ஓய்ந்துள்ளது. இதனால், குந்தா மின் வட்டத்தில் உள்ள மின்நிலையங்கள், இனிவரும் நாட்களில் மின்உற்பத்தி மேற்கொள்ளவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பைக்காரா மின் வட்டத்தில் உள்ள,ஆறு மின் நிலையங்களிலும் இதே சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'தற்போது அணைகளில் தண்ணீர் குறைந்தாலும், மழை தொடரும் என எதிர்பார்க்கிறோம். மழை வந்தால் நிலைமை சரியாகும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X