தமிழ்நாடு

கோயில் சொத்துக்களை அடையாளம் காண தொழில்நுட்பம்: அரசு தகவல்

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை :கோயில் சொத்துக்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.அறநிலையத்துறை இணையதளத்தையும், முக்கிய கோயில்களின் இணையதளங்களையும் முறையாக பராமரிக்கவும், அனைத்து தகவல்களையும் இணையதளங்களில் வழங்கவும் கோரி, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் செயலர் ராதா ராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு
கோயில் சொத்துக்கள், அடையாளம்,தொழில்நுட்பம் ,

சென்னை :கோயில் சொத்துக்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.

அறநிலையத்துறை இணையதளத்தையும், முக்கிய கோயில்களின் இணையதளங்களையும் முறையாக பராமரிக்கவும், அனைத்து தகவல்களையும் இணையதளங்களில் வழங்கவும் கோரி, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் செயலர் ராதா ராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில்களின் சொத்து விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது.அறநிலையத்துறைகமிஷனர் குமரகுருபரன், தாக்கல் செய்த அறிக்கை:கோயில் சொத்துக்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட குழுவின் பணி நடந்து கொண்டிருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக, இந்தப் பணி மெதுவாக நடக்கிறது.
தொற்றுப் பணிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாலும் 'சர்வேயர்' பற்றாக்குறையாலும், பணிகளை முடிப்பதற்கு நேரமாகிறது.எனவே, கோயில் சொத்துக்களை அளவிடவும், அடையாளம் காணவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.


latest tamil news



'டிரோன்' தொழில்



நுட்பத்தை பயன்படுத்தி, புவிசார் தகவல் அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். ஓராண்டு, இரண்டாண்டுக்கு ஒரு முறை, தகவல்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், தவறுகள் குறைக்கப்படும்; துல்லியமான விபரங்கள் கிடைக்கும். பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.எனவே, இந்த தொழில்நுட்பத்தை கையாளுவதை ஏற்று, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையை பதிவு செய்து, விசாரணையை ஜூலை 21க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-202117:11:24 IST Report Abuse
oce ஏற்கனவே பஞ்சமி பொறம்போக்கிடங்கள் என பல லட்சம். ஏக்கர்களுக்கு மேல் ஆட்டைய போட்ட கட்சி ஆட்களை கண்டு பிடிக்க இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம். முரசொலி இடத்தையும் அடையாளம் கண்டு பிடிக்கலாம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-ஜூன்-202114:30:52 IST Report Abuse
Vena Suna கோவில் சொத்துக்கள் மீது மட்டும் அதிக கவனம் ஏனோ?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூன்-202113:22:09 IST Report Abuse
Pugazh V அலறுது கோவில் சொத்து களை ஆக்கிரமிப்பு செய்து அனுபவிக்கும் கூட்டம் கதறுது. பதறுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X