அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : லாட்டரி வேண்டவே வேண்டாம்!

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை துவக்க, தமிழக அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. லாட்டரி அதிபர் மார்ட்டின், சமீபத்தில் நிதியமைச்சர் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து, லாட்டரி சீட்டு விற்பனை குறித்து பேச்சு

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை துவக்க, தமிழக அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. லாட்டரி அதிபர் மார்ட்டின், சமீபத்தில் நிதியமைச்சர் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து, லாட்டரி சீட்டு விற்பனை குறித்து பேச்சு நடத்தியதாக, ஊர்ஜிதம் இல்லாத தகவல் பரவி வருகிறது. இதற்கு, தமிழக அரசு இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.



latest tamil news



ஏற்கனவே, ஊரடங்கு முழுமையாக முடியும் வரை கூட காத்திருக்காமல், 'டாஸ்மாக்' கடையை திறந்தது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக மது குடிக்காமல் இருந்தோரை, மீண்டும் டாஸ்மாக் கடையில் 'தவம்' கிடக்க செய்த தி.மு.க., அரசு மீது பெண்கள் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில், லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி என்றால் கேட்கவே வேண்டாம். சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் ஏழை பெண் ஒருவர், 'என் கணவரின் மது பழக்கத்தால்,வீட்டில் வறுமை தாண்டவமாடியது. டாஸ்மாக் கடை மூடியதால், எங்கள் குடும்பம் நன்றாக இருக்கிறது. எனவே, மதுக்கடையை மூட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அந்த பெண்ணை போல எண்ணற்ற இல்லத்தரசிகள், டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்த போது, மகிழ்ச்சியாக இருந்தனர். மீண்டும் டாஸ்மாக் திறந்தபோது, அவர்கள் நிச்சயம் சாபம் விட்டிருப்பர். லாட்டரி சீட்டால், எண்ணற்ற குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தன. இதனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 2003ல் தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.


latest tamil news



தற்போது முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி அளித்தால், கூலி தொழிலாளியின் தினப்படி வருமானம், டாஸ்மாக் கடைக்கு பாதியும், லாட்டரி சீட்டுக்கு மீதியும் என, கரைந்து விடும். அவர்களின் குடும்பம் பசியால் வாடி தற்கொலை செய்து கொள்ளும். அரசுக்கு வருவாயை பெருக்க எத்தனையோ நல்வழிகள் உண்டு; அதை பின்பற்றலாம்.


Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்லப கணபதி - தென்காசி,இந்தியா
25-ஜூன்-202108:31:34 IST Report Abuse
வல்லப கணபதி தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு ஆற்றுமணல் கள்ளுக்கடை இம்மூன்றையும் தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும். கிராமப்புற பகுதிகளில் இயங்குகிற மது கடைகளை நிரந்தரமாக மூடிவிட்டு கள்ளுக்கடை திறக்க வேண்டும். இதனால் அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். மக்கள் கைகளில் பணம் புரளும். வேலை பலபேருக்கு கிடைக்கும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஜூன்-202120:10:30 IST Report Abuse
Ramesh Sargam லாட்டரி சீட்டு, டாஸ்மாக் சரக்கு, இரவு நேர கேளிக்கை விடுதிகள் போன்றவை குடும்பங்களை சீரழிக்கும் சாத்தான்கள். உண்மையான அக்கறை மக்கள் மீது அரசுக்கு இருக்குமேயானால், இவைகளை உடனே 'ரத்து' செய்யவேண்டும். நீட் ரத்து, தேர்வு ரத்து, என்று தேவைப்படும் விஷயங்களை ரத்து செய்வதை விட்டு விட்டு, இதுபோன்ற குடும்பங்களை அழிக்கும் சாத்தான்களை ரத்து செய்தால் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சிக்கு உள்ளாவார்கள்.
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
20-ஜூன்-202119:11:19 IST Report Abuse
Sivaraman சோத்துக்கே லாட்டரி . அடிக்கபோறோமோ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் உலக வாழ்க்கையில் எல்லோரையும் லாட்டரி அடிக்கவைப்பேன் என்றால் ஒட்டுப் போட்டதற்கு அடிக்கும் லாட்டரி பரிசு
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
20-ஜூன்-202121:31:32 IST Report Abuse
Dhurveshபாவம் உன்ளேவேல் அப்படியா நாங்கள் அப்படி எல்லாம் இல்லை கடவுள் புண்ணியத்தில் நன்றாக இருக்கிறோம் , ஒன்று நாம் எதை சொல்லுகிறோமோ அதை விதைக்கிறோம் என்று அர்த்தம் , இந்த மாதிரி ""சோத்துக்கே லாட்டரி"" எல்லாம் எப்போதும் போட கூடாது , அரசியல் மாச்சரியங்கள் இருக்கலாம் இதை தவிர்க்க பாருங்கள் நல்லதே பேசினால் நல்லதே நடக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X