இது உங்கள் இடம் : லாட்டரி வேண்டவே வேண்டாம்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : லாட்டரி வேண்டவே வேண்டாம்!

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (39)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை துவக்க, தமிழக அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. லாட்டரி அதிபர் மார்ட்டின், சமீபத்தில் நிதியமைச்சர் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து, லாட்டரி சீட்டு விற்பனை குறித்து பேச்சு

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை துவக்க, தமிழக அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. லாட்டரி அதிபர் மார்ட்டின், சமீபத்தில் நிதியமைச்சர் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து, லாட்டரி சீட்டு விற்பனை குறித்து பேச்சு நடத்தியதாக, ஊர்ஜிதம் இல்லாத தகவல் பரவி வருகிறது. இதற்கு, தமிழக அரசு இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.



latest tamil news



ஏற்கனவே, ஊரடங்கு முழுமையாக முடியும் வரை கூட காத்திருக்காமல், 'டாஸ்மாக்' கடையை திறந்தது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக மது குடிக்காமல் இருந்தோரை, மீண்டும் டாஸ்மாக் கடையில் 'தவம்' கிடக்க செய்த தி.மு.க., அரசு மீது பெண்கள் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில், லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி என்றால் கேட்கவே வேண்டாம். சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் ஏழை பெண் ஒருவர், 'என் கணவரின் மது பழக்கத்தால்,வீட்டில் வறுமை தாண்டவமாடியது. டாஸ்மாக் கடை மூடியதால், எங்கள் குடும்பம் நன்றாக இருக்கிறது. எனவே, மதுக்கடையை மூட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அந்த பெண்ணை போல எண்ணற்ற இல்லத்தரசிகள், டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்த போது, மகிழ்ச்சியாக இருந்தனர். மீண்டும் டாஸ்மாக் திறந்தபோது, அவர்கள் நிச்சயம் சாபம் விட்டிருப்பர். லாட்டரி சீட்டால், எண்ணற்ற குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தன. இதனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 2003ல் தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.


latest tamil news



தற்போது முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி அளித்தால், கூலி தொழிலாளியின் தினப்படி வருமானம், டாஸ்மாக் கடைக்கு பாதியும், லாட்டரி சீட்டுக்கு மீதியும் என, கரைந்து விடும். அவர்களின் குடும்பம் பசியால் வாடி தற்கொலை செய்து கொள்ளும். அரசுக்கு வருவாயை பெருக்க எத்தனையோ நல்வழிகள் உண்டு; அதை பின்பற்றலாம்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X