சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. கள்ளக்காதலனை வரவழைத்து கணவனை கொன்ற மனைவி கைதுசைதாப்பேட்டை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை தேடுகின்றனர்.சைதாப்பேட்டை, ஜெயராமன் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 36; இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வந்தார். மனைவி நிரோஷா, 30. இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள்

தமிழக நிகழ்வுகள்
1. கள்ளக்காதலனை வரவழைத்து கணவனை கொன்ற மனைவி கைது
சைதாப்பேட்டை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை தேடுகின்றனர்.

சைதாப்பேட்டை, ஜெயராமன் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 36; இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வந்தார். மனைவி நிரோஷா, 30. இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நிரோஷா, மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து, கணவனை வெட்டி கொலை செய்து விட்டதாக கூச்சல் போட்டுள்ளார். சைதாப்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின், நிரோஷாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், நிரோஷா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரிந்தது.latest tamil newsஇது குறித்து, போலீசார் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன், கோடம்பாக்கத்தில் வசித்தபோது, தி.நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில், நிரோஷா பணி புரிந்தார். அருகில் உள்ள கடையில், திருமணமாகாத மணிகண்டன், 30, டெயிலராக பணி புரிந்தார்.இருவருக்கும், கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கோதண்டபாணி வேலைக்கு சென்றபின், வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு நாள், வீட்டு உரிமையாளர் வெளியே பூட்டு போட்டு, கோதண்டபாணியிடம் சிக்க வைத்துள்ளார்.இதில் ஏற்பட்ட தகராறில், தம்பதி பிரிந்து வாழ்ந்தனர்.

குழந்தைகள் நலன் கருதி, உறவினர்களின் சமரச பேச்சுக்குபின், கோதண்டபாணி, மனைவியுடன் சேர்ந்தார்.கடந்தாண்டு, சைதாப்பேட்டையில் குடியேறினர். மீண்டும், நிரோஷா, மணிகண்டன் இடையே கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. இதை, கோதண்டபாணி கண்டித்துள்ளார்.ஒரு கட்டத்தில், கோதண்டபாணியை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். ஏற்கனவே போட்ட திட்டப்படி, நிரோஷா அழைப்பின்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு, மணிகண்டன் கோதண்டபாணி வீட்டுக்கு சென்றார்.ஏற்கனவே, வாங்கி தயாராக வைத்திருந்த அரிவாளால், துாங்கி கொண்டிருந்த கோதண்டபாணியை, சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடினார்.நிரோஷாவை கைது செய்துள்ளோம். மணிகண்டன் விரைவில் சிக்குவார்.இவ்வாறு போலீசார் கூறினர்.

2. 135 கிலோ குட்கா பறிமுதல்
தஞ்சாவூர் : மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.


latest tamil newsதஞ்சாவூர் மாவட்டம், ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 30. இவர், தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மருததுவக் கல்லுாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடையில், நேற்று சோதனை நடத்திய போலீசார் 135 கிலோ பான்மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அருண்குமாரை கைது செய்தனர்.

3. ஏ.டி.எம்., கொள்ளையை தடுக்க முயன்ற வணிக வளாக நிர்வாகி குத்திக்கொலை
திருவாரூர் : வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுக்க வந்த வணிக வளாக பொறுப்பாளரை குத்திக் கொன்ற நான்குபேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் அருகே கூடுரில் வணிக வளாகம் ஒன்றில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. வணிக வளாக உரிமையாளரின் மாமனார் தமிழரசன் 65, என்பவர் வணிக வளாகத்தை நிர்வகித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு சத்தம் கேட்டு ஏ.டி.எம். மையத்திற்கு எதிர்புறத்தில் வசிப்பவர்கள் ஏ.டி.எம்.இயந்திரத்தை யாரோ உடைப்பதாக தமிழரசனுக்கு தகவல் கொடுத்தனர்.அவர் தனியாக வந்துள்ளார். பின் கிராம மக்களும் திரண்டனர். நான்கு பேரையும் பிடிக்க முயன்றபோது மதன் 20, மட்டும் கிராமமக்களிடம் சிக்கினான். மற்ற மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பினர். போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து போலீசாரிடம் மதனை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.


latest tamil news


Advertisement


இந்நிலையில் மதனை மீட்பதற்காக கொள்ளையர்கள் மூவரும் திரும்பி வந்தனர். அப்போது கூட்டம் அதிகம் இருந்ததால் ஆத்திரத்தில் தமிழரசனை திருப்புளியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். காயம் அடைந்த தமிழரசன் இறந்தார்.தப்பி ஓடிய மூவரையும் போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது பைக்கில் இருந்து விழுந்த மூவரும் காயம் அடைந்தனர். அவர்களை பிடித்த போலீசார் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் மதனுடன் வந்தது ஆகாஷ் 22, பிரதாப் 24, விஜய் 20, என்பது தெரிந்தது.போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

4. சூதாடி பணத்தை தொலைத்து பொய் புகாரளித்தவர் சிக்கினார்
சைதாப்பேட்டை, : சைதாப்பேட்டையில், சூதாடி பணத்தை தொலைத்து, பொய் புகார் அளித்த கட்டுமான மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsமேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் உட்டம் சஹா, 36. சைதாப்பேட்டையில் நடக்கும், ஒரு அடுக்குமாடி கட்டுமான பணியில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.இவர் கடந்த, 30ம் தேதி, சைதாப்பேட்டை போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், 'சைதாப்பேட்டை, தாடண்டன் நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம்.,மில், 18 ஆயிரம் ரூபாய் எடுத்து வெளியே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், என்னை சரமாரியாக தாக்கி பணத்தை பறித்து சென்றனர்' என, தெரிவித்திருந்தார்.இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். பின், அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அன்றைய தினம், 1,000 ரூபாய் மட்டும் எடுக்கப்பட்டது தெரிந்தது.

தீவிர விசாரணையில், கட்டுமான நிறுவன மேலாளர், ஊழியர்களுக்கான சாப்பாடு, தினசரி ஊதியத்தை சஹாவின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட்ட சஹா, ஊழியர்களின் ஊதிய பணத்தையும் வைத்து சூதாடி உள்ளார். அதில், பணத்தை இழந்ததால், அதை சரிகட்ட, மர்மநபர்கள் பணத்தை பறித்ததாக பொய் புகார் அளித்தது தெரிந்தது.இதையடுத்து, நேற்று சஹாவை போலீசார் கைது செய்தனர்.

5. போலி நகை அடகு ; மோசடி வாலிபர் கைது
மதுரை : போலி நகையை அடகு வைத்து, 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மேலுார், திருவாதவூரில் 10க்கும் மேற்பட்ட கடைகளில், 46 சவரன் போலி நகையை அடகு வைத்து, 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கு குறித்து, மேலுார் போலீசார் விசாரித்து வந்தனர்.நேற்று முன்தினம் செக்கடி பகுதியில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.பைக்கில் வந்த தேவகோட்டையை சேர்ந்த சிவசக்தி, 25, என்பவரை பிடித்து விசாரித்தனர்.முரணாக பதிலளித்தார். தீவிர விசாரணையில் காளையார் கோவிலில் அவர் தங்கி இருப்பதும், நகை செய்பவர்களின் மூலம் கவரிங் நகை மீது தங்க முலாம் பூசி, ஹால்மார்க் முத்திரை இட்டு மோசடி செய்தது தெரிந்தது.


latest tamil newsமோசடி பணத்தில் காளையார் கோவிலில் 2 இடங்கள் வாங்கியதும், புதுவீடு கட்டி வருவதும் தெரிந்தது. அவரிடம், 2 லட்சம் ரூபாய், பைக், அலைபேசி, 2 பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது மதுரை, தேவகோட்டையில் பல்வேறு வழக்குகள் உள்ளன.


latest tamil newsஇந்தியாவில் குற்றம் :
பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் யூரியில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுவதாக, பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X