பொது செய்தி

இந்தியா

பணக்காரர்கள் பட்டியலில் அதானி விட்ட இடத்தை பிடிப்பாரா?

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : 'அதானி' நிறுவனத்தின் பங்குகள் அண்மையில் தொடர் சரிவை கண்ட நிலையில், அதன் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிவைக் கண்டுள்ளது. இதையடுத்து, அவர் தற்போது வகிக்கும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற தகுதியை இழந்து, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.'போர்ப்ஸ்' நிறுவன தரவுகளின்படி, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு, கடந்த 11ம்

புதுடில்லி : 'அதானி' நிறுவனத்தின் பங்குகள் அண்மையில் தொடர் சரிவை கண்ட நிலையில், அதன் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிவைக் கண்டுள்ளது. இதையடுத்து, அவர் தற்போது வகிக்கும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற தகுதியை இழந்து, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.



latest tamil news



'போர்ப்ஸ்' நிறுவன தரவுகளின்படி, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு, கடந்த 11ம் தேதியன்று, 9.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, 18ம் தேதியன்று, 7.90 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து உள்ளது. கிட்டத்தட்ட 1.60 லட்சம் கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டு உள்ளது.அதானி குழுமத்தில், 43 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும், மூன்று அன்னிய முதலீட்டாளர்களின் கணக்கு முடக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை கடுமையான சரிவைக் கண்டன. இதையடுத்து, இந்த செய்தியை மறுத்து, அதானி குழுமம் அறிக்கை விட்டது.


latest tamil news



இருப்பினும் பங்குகளை விற்கும் போக்கு பெருமளவு மட்டுப்படவில்லை. ஒரு சில தரப்பினர், அதானி நிறுவன விளக்கங்களில் முழுமையாக திருப்திஅடையவில்லை. நாளை பங்கு வர்த்தகம் மீண்டும் துவங்கும் நிலையில், அதானி குழும பங்குகள் மீளுமா அல்லது மேலும் சரியுமா என்பது தான், சந்தை முதலீட்டாளர்களிடையே எழும் கேள்வியாக இருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A G SEHARAN - Mayiladuthurai,இந்தியா
20-ஜூன்-202123:20:12 IST Report Abuse
A G SEHARAN ஒருவர் மனது வைத்தால் அதானி விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பார்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
20-ஜூன்-202112:28:06 IST Report Abuse
Suppan இவர்கள் தன்னை சாமானியன் என்று சொல்லிக் கொண்ட கருணாவின் வாரிசுகள். ஆஹா மேட்டுக்குடி மக்கள் ஒரு சாமானியன் பதவிக்கு வந்ததால் எதிர்க்கிறார்கள் என்று ஒப்பாரி வைத்தார். அவரும் அவர் சார்ந்த குடும்பங்களும் சூப்பர் மேட்டுக்குடிகள் ஆன பின் அந்த ஒப்பாரியை நிறுத்தினார். இப்பொழுது கழகக் கண்மணிகள் அதானி அம்பானி என்று ஒப்பாரி வைக்கிறார்கள். மறந்தும் சன் குழுமம், கலைஞர் குழுமம் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-ஜூன்-202111:53:33 IST Report Abuse
 Muruga Vel நாளைக்கு பத்து சதவிகிதம் வீழ்ச்சி அடையும் ...
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
20-ஜூன்-202117:15:49 IST Report Abuse
Suppanவீழ்ச்சி அடைந்து திரும்பவும் மேலே இருக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X