பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி எழுதிய ஆய்வுக் குறிப்பு ; கரூர் கலெக்டர் டுவிட்டரில் நெகிழ்ச்சி

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
கரூர் : கரூர் மாவட்ட கலெக்டர் வேங்காபட்டி பள்ளியில் ஆய்வின் போது கருணாநிதி எழுதிய ஆய்வு குறிப்பை கண்டார். அதை தனது டுவிட்டரில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்காபட்டி என்ற கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. அநத பள்ளியில் மாவட்ட கலகெ்டர் பிரபு சங்கர் டி குணாளன் நேற்று முன்தினம் ஆய்வு

கரூர் : கரூர் மாவட்ட கலெக்டர் வேங்காபட்டி பள்ளியில் ஆய்வின் போது கருணாநிதி எழுதிய ஆய்வு குறிப்பை கண்டார். அதை தனது டுவிட்டரில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.latest tamil news


கரூர் மாவட்டம் வேங்காபட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் கலகெ்டர் பிரபு சங்கர் டி குணாளன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஆய்வு குறிப்பு எழுதினார். அப்போது அவர் கண்ணில்பட்ட ஒரு ஆய்வு குறிப்பு கலெக்டரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி, வேங்காபட்டி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது அவர் எழுதிய ஆய்வு குறிப்புதான் கலெக்டர் பிரபு சங்கர் நெகிழ்ச்சிடைய காரணம். கருணாநிதி ஆய்வு குறிப்பில் “இன்று வேங்காப்பட்டி பள்ளியை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 108-ல் இன்று பள்ளிக்கு வருகை தந்திருந்தவர்கள் 31 பேர். இந்தப் பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தின் மேல் மரங்கள் விழுந்திருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாக பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் நன்கு கவனிக்கப்படுதல் நன்று” என கூறியிருந்தார். இந்த குறிப்பை போட்டோ எடுத்த பிரபு சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு, கருணாநிதியின் ஆய்வு குறிப்பு ஒரு புதையல் என குறிப்பிட்டுள்ளார்.


கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்காபட்டி என்ற கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. அநத பள்ளியில் மாவட்ட கலகெ்டர் பிரபு சங்கர் டி குணாளன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டிருந்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடக்கும் போது வழக்கமாக அதிகாரிகள் ஆய்வுக் குறிப்பு எழுத வேண்டும். அந்தவகையில் கலெக்டர் ஆய்வின் போது அவர் கண்ட காட்சி அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி முதன் முறையாக குளித்தலை தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை கண்டவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

தொடர்ந்து, 1959 ஆம் ஆண்டில் வேட்பாளராக வென்ற கருணாநிதி தனது தொகுதியின் ( குளித்தலை ) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒருமுறை வேங்காபட்டி கிராமத்தின் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கே தன் ஆய்வுக் குறிப்பை தனது கை படவே எழுதியிருக்கிறார். அந்த ஆய்வுக் குறிப்பில் அவர் கூறியவை : அதில், “இன்று வேங்காப்பட்டி பள்ளியை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 108-ல் இன்று பள்ளிக்கு வருகை தந்திருந்தவர்கள் 31 பேர். இந்தப் பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தின் மேல் மரங்கள் விழுந்திருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாக பொதுமக்கள் நன்கு பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் நன்கு கவனிக்கப்படுதல் நன்று”. இவ்வாறு கூறியிருந்தார்.


latest tamil newsஇதனை பார்த்து, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர் கூறுகையில், இன்று மாவட்ட கலெக்டராக வேங்காப்பட்டி என்னும் கிராமத்தில் எனது ஆய்வை தொடங்கியபோது இந்த புதையலை கண்டேன். 1959 ஆம் ஆண்டில் குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் கருணாநிதி எழுதிய ஆய்வுக்குறிப்பு இது. இவ்வாறு பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
binakam - chennai,இந்தியா
21-ஜூன்-202108:08:36 IST Report Abuse
binakam இதுக்கே எவ்ளோ பெரிய வியப்ப்ப? பெருந்தலைவர் காமராஜர் கட்டிய பள்ளியை மறக்கலாமா? இ ஆ பணிக்கு இது அழகா? பீநாகம்
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
21-ஜூன்-202107:02:40 IST Report Abuse
Palanisamy T இதில் நெகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை ஒரு தடவை இரு தடவையல்ல ஐந்துமுறை மக்கள் அவரை முதல்வராக நம்பித் தேர்தெடுத்துள்ளனர் "உயர்ந்தக் கோபுரங்கள் தாழ்த்த உள்ளங்கள்" -. இந்த வாசகம் ஆரம்ப காலங்களில் இவர் முதல்வராக இருந்தப் போது இவர் சொன்னவொரு திருவாசகச் சொல். காலத்தால் பொன்னெழுத்துக்களால் பதிக்க பட வேண்டியவை. அதற்க்கு ஏற்றவாறு இவர் நடந்துக் கொள்ளவில்லை உயர்ந்தக் கோபுரங்களென்றால் கடவுள் நம்பிக்கையின் அடையாளம் கடவுள் விரோதக் கொள்கையே தாழ்ந்தவர்களிடம் நிறைந்துள்ளது. அந்த எண்ணங்கள் தாழ்ந்தவர்களின் அடையாளம். சொன்ன சொல்லுக்கு ஏற்றவாறு இவர் நடந்துக் கொண்டிருந்தாள் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
21-ஜூன்-202100:08:33 IST Report Abuse
iconoclast மருத்துவர்களால் வெல்ல முடியாத கொரோனவை வென்று விட்டோம் என்று மார்தட்டிய தலைவரை விட இது சிறந்தது தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X