கருணாநிதி எழுதிய ஆய்வுக் குறிப்பு ; கரூர் கலெக்டர் டுவிட்டரில் நெகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி எழுதிய ஆய்வுக் குறிப்பு ; கரூர் கலெக்டர் டுவிட்டரில் நெகிழ்ச்சி

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (68)
Share
கரூர் : கரூர் மாவட்ட கலெக்டர் வேங்காபட்டி பள்ளியில் ஆய்வின் போது கருணாநிதி எழுதிய ஆய்வு குறிப்பை கண்டார். அதை தனது டுவிட்டரில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்காபட்டி என்ற கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. அநத பள்ளியில் மாவட்ட கலகெ்டர் பிரபு சங்கர் டி குணாளன் நேற்று முன்தினம் ஆய்வு

கரூர் : கரூர் மாவட்ட கலெக்டர் வேங்காபட்டி பள்ளியில் ஆய்வின் போது கருணாநிதி எழுதிய ஆய்வு குறிப்பை கண்டார். அதை தனது டுவிட்டரில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.latest tamil newsகரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்காபட்டி என்ற கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. அநத பள்ளியில் மாவட்ட கலகெ்டர் பிரபு சங்கர் டி குணாளன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டிருந்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடக்கும் போது வழக்கமாக அதிகாரிகள் ஆய்வுக் குறிப்பு எழுத வேண்டும். அந்தவகையில் கலெக்டர் ஆய்வின் போது அவர் கண்ட காட்சி அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி முதன் முறையாக குளித்தலை தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை கண்டவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

தொடர்ந்து, 1959 ஆம் ஆண்டில் வேட்பாளராக வென்ற கருணாநிதி தனது தொகுதியின் ( குளித்தலை ) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒருமுறை வேங்காபட்டி கிராமத்தின் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கே தன் ஆய்வுக் குறிப்பை தனது கை படவே எழுதியிருக்கிறார். அந்த ஆய்வுக் குறிப்பில் அவர் கூறியவை : அதில், “இன்று வேங்காப்பட்டி பள்ளியை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 108-ல் இன்று பள்ளிக்கு வருகை தந்திருந்தவர்கள் 31 பேர். இந்தப் பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தின் மேல் மரங்கள் விழுந்திருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாக பொதுமக்கள் நன்கு பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் நன்கு கவனிக்கப்படுதல் நன்று”. இவ்வாறு கூறியிருந்தார்.


latest tamil newsஇதனை பார்த்து, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர் கூறுகையில், இன்று மாவட்ட கலெக்டராக வேங்காப்பட்டி என்னும் கிராமத்தில் எனது ஆய்வை தொடங்கியபோது இந்த புதையலை கண்டேன். 1959 ஆம் ஆண்டில் குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் கருணாநிதி எழுதிய ஆய்வுக்குறிப்பு இது. இவ்வாறு பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X