சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணை நடிகையின் பாலியல் புகார்: மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் மாஜி அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவர் சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் . சமீபத்தில் மதுரையில் வசித்து

சென்னை: துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் மாஜி அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவர் சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.latest tamil news


நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு மகளிர் போலிசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான மணிகண்டனை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. அவருடைய முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யபட்டது. பெங்களுரில் பதுங்கியிருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடக்கிறது.


அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் . சமீபத்தில் மதுரையில் வசித்து வந்தார்.
இவர் அமைச்சராக இருந்தபோது அரசை குறைகூறியதால் கடந்த 2019ல் அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அமைச்சர் காலத்தில் துணை நடிகை சாந்தினியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் இருவரும் நெருக்கமாக பழகியதாக தெரிகிறது. இது தொடர்பாக சாந்தினி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப்புகாரில் மணிகண்டன் திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகவும், 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் சில வாரங்கள் அளிக்கப்பட்ட முன்ஜாமினை கோர்ட் விலக்கி கொண்டது.


latest tamil newsஇந்த வழக்கு தொடர்பாக 2 தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இவரை போலீசார் கைது செய்ய முயற்சித்தபோது தமிழகத்தை விட்டு தப்பியதாக தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீஸ் மற்றும் உறவினர்கள் உதவியுடன் மணிகண்டன் பெங்களூருவில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று மணிகண்டனை கைது செய்தனர். இவர் சென்னை கொண்டு வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூன்-202104:53:06 IST Report Abuse
meenakshisundaram ஜோடி பாக்க நல்லாதானே புருஷன் பொண்டாட்டி மாதிரி இருக்குது ?சாந்தினி முகத்திலே எத்தனை சநதோஷம் தெரியுது?-திடீர்னு என்னாச்சு ?
Rate this:
Cancel
21-ஜூன்-202109:26:12 IST Report Abuse
அருணா அமைச்சர் வசதி எல்லாம் சரி தருமணம் (ங்கள்) செய்திருந்தால் அநதிக பிரச்சனை இல்லை. அமைச்சர்கள் குடும்பத்தில் இது வழக்கம் தானே. அதை விடுங்க பணத் தூண்டிலுக்கு இரையான பெண்.. அங்கீகாரம் இல்லை என்றால் கோபம் தானே வரும். இந்த மாதிரி பெண்கள் சாபக்கேடுதான்
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-ஜூன்-202106:00:03 IST Report Abuse
NicoleThomsonஅந்த அமைச்சருக்கு கார்பொரேட் கழக குடும்பத்தின் டச் இருந்திருந்தா அவரு எங்கயோ போயிருந்துஇருப்பாரு மெரினா கடற்கரையில் ஏர்கூலர் வைத்து படுத்து கூட இருந்திருக்கலாம்...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21-ஜூன்-202105:35:08 IST Report Abuse
NicoleThomson மூன்று முறை கருக்கலைப்பு செய்து கொண்டேன் என்று கூறும் நடிகையின் கூற்றை நீதிபதி கூர்ந்து கவனிப்பாரா? நடிக்கைகாக மாத்திரைகளை விழுங்கிய அரசியல் வாரிசு பற்றி கேக்கவே வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X