சென்னை: துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் மாஜி அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவர் சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் . சமீபத்தில் மதுரையில் வசித்து வந்தார்.
இவர் அமைச்சராக இருந்தபோது அரசை குறைகூறியதால் கடந்த 2019ல் அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அமைச்சர் காலத்தில் துணை நடிகை சாந்தினியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் இருவரும் நெருக்கமாக பழகியதாக தெரிகிறது. இது தொடர்பாக சாந்தினி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப்புகாரில் மணிகண்டன் திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகவும், 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் சில வாரங்கள் அளிக்கப்பட்ட முன்ஜாமினை கோர்ட் விலக்கி கொண்டது.

இந்த வழக்கு தொடர்பாக 2 தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இவரை போலீசார் கைது செய்ய முயற்சித்தபோது தமிழகத்தை விட்டு தப்பியதாக தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீஸ் மற்றும் உறவினர்கள் உதவியுடன் மணிகண்டன் பெங்களூருவில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று மணிகண்டனை கைது செய்தனர். இவர் சென்னை கொண்டு வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE