அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், காலியாக உள்ள, மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என தெரிகிறது. மூன்று பதவிகளையும் தி.மு.க.,வே கைப்பற்றும் என்பதால், அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமது ஜான், மார்ச்சில் மரணமடைந்தார். அவரது பதவி காலியானது. அவரது பதவி காலம், நான்கு ஆண்டுகள் உள்ளன.ராஜினாமாஅ.தி.மு.க., ராஜ்யசபா
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்

சென்னை: தமிழகத்தில், காலியாக உள்ள, மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என தெரிகிறது. மூன்று பதவிகளையும் தி.மு.க.,வே கைப்பற்றும் என்பதால், அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமது ஜான், மார்ச்சில் மரணமடைந்தார். அவரது பதவி காலியானது. அவரது பதவி காலம், நான்கு ஆண்டுகள் உள்ளன.


ராஜினாமா




அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,க்களாகி விட்டனர். இருவரும் தங்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில், வைத்திலிங்கம் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டும், முனுசாமி பதவி காலம் முடிய, ஐந்து ஆண்டுகளும் உள்ளன.தற்போது, காலியாக உள்ள மூன்று இடங்களுக்கும், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், விரைவில் தேர்தல் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'மூன்று பதவிகளுக்கும், தனித்தனியே தேர்தல் அறிவிப்பு வெளியிட வேணடும்' என, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில், மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன் கூறுகையில், '''மூன்று பதவிகளில், முகமது ஜான் வகித்த பதவிக்கு தனியாகவும், மற்ற இரு பதவிகளுக்கு தனியாகவும், தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. மூன்று பதவிகளையும், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க.,வே கைப்பற்றும்,'' என்றார்.


பரிசீலனை


latest tamil news



காலியாக உள்ள, மூன்று எம்.பி., பதவிகளும், பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள, தி.மு.க.,வுக்கே கிடைக்க வாய்ப்புள்ளதால், அப்பதவிகளைப் பெற, தி.மு.க.,வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த, தங்கதமிழ்செல்வன், சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட பலரது பெயர்கள், தி.மு.க.,வின் பரிசீலனையில் உள்ளன. இது தவிர, சட்டசபை தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத பலர், எம்.பி., பதவி பெற காய் நகர்த்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
21-ஜூன்-202110:52:31 IST Report Abuse
Sidhaarth தொண்டர் பலம் இருக்கு போட்டி இருக்கு கூந்தல் இருக்கிற மகராசி அல்லி முடியுறாங்க.இங்க நமக்கு நோட்ட்டாவுக்கே நாக்கு தள்ளுது. ஏதோ கூட்டணியால் கரை சேந்தோம். நம்மளால பெரு மூச்சிதான் விட முடியும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-ஜூன்-202108:16:14 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவர்கள் பொய் என்னத்த கிழிக்க போகிறார்கள். மக்களின் வரி பணம்தான் வீணாகிறது. எந்தவித சலுகையோ சம்பளமோ இல்லையென்று கூறுங்கள் இவர்கள் எல்லோரும் பின் வாங்கிவிடுவார்கள். இல்லையென்றால் சம்பாதிக்க என்ன வழி என்று தேடுவார்கள். முதலில் இந்த tem ஒழிக்க படவேண்டும்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
21-ஜூன்-202101:52:04 IST Report Abuse
BASKAR TETCHANA யார் கையில் 25 கோடி இருக்கிறதோ அவர்களுக்கு தான் முதல் மரியாதை. அதுவும் பத்து கோடி வெள்ளையாகவும் பாக்கி 15 கோடி கருப்பாய் இருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X