5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல், ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.கருத்து வேறுபாடுஇங்குள்ள கான்பூரில், 'பாபா' என, தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற போலி சாமியார், 2005ல், மெயின்புரி மாவட்டத்தை
பெண்கள், திருமணம், போலி திருமணம்

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல், ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.


கருத்து வேறுபாடு



இங்குள்ள கான்பூரில், 'பாபா' என, தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற போலி சாமியார், 2005ல், மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.பின், 2010ல், பரேலியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை,அனுஜ் திருமணம் செய்தார்.இவர்களும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து, 2014ல், அனுஜ் மூன்றாவது திருமணம் செய்தார். பின், மூன்றாவது மனைவியின் உறவு பெண்ணை, நான்காவதாக திருமணம் செய்தார். அந்த பெண், முந்தைய திருமணங்கள் குறித்து அறிந்து, தற்கொலை செய்து கொண்டார்.

இதைஅடுத்து, 2019ல், ஐந்தாவதாக அனுஜ், மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அனுஜ் துன்புறுத்தியதன் காரணமாக, அவர் மீது அந்த பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அவரின் மற்ற மனைவியருக்கு இது குறித்த விபரம் தெரியவந்தது.இதர மனைவியரிடமிருந்து இதுவரை விவாகரத்து முறையாக பெறப்பட வில்லை. எனவே அவர்கள், போலீசாரிடம் புகார் அளித்துஉள்ளனர்.


latest tamil news





ஆறாவது திருமணம்



இந்நிலையில் கான்பூரில் வைத்து, போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், ஆறாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. மேலும் பலரை, அவர் தன் வலையில் சிக்க வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
21-ஜூன்-202112:02:33 IST Report Abuse
rajan இந்த சாமியார் செய்தது பிஜேபி ஆட்சியில் தப்பில்லை ராமாயணத்தில் தசரதனுக்கு எத்தனை மனைவிகள் எத்தனை கடவுளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் ஆகவே இது தப்பில்லை
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
21-ஜூன்-202113:12:41 IST Report Abuse
RaajaRaja Cholanமூர்க்கன் கூட்டத்துக்கு ஒருவனுக்கு எதனை மனைவிகள் மூர்க்கனே , இவன் தமிழ் தெரிந்த பங்களாதேஷ் காரனோ ?...
Rate this:
rajan - erode,இந்தியா
21-ஜூன்-202118:37:22 IST Report Abuse
rajanசிங்கப்பூரில் பெருங்குடி எங்கே இருக்கிறது அல்லது பெருங்குடியில் சிங்கப்பூர் எங்கே இருக்கிறது ஏமாற்று பேர்வழிகள் விலாசம் இல்லாதவர்கள்...
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
21-ஜூன்-202111:42:52 IST Report Abuse
தத்வமசி பல திருமணம் செய்தவன் சாமியாராகி ஓடி விட வாய்ப்பு உண்டு. இவர் மாறி மாறி திருமணம் செய்து கொள்கிறார். எப்படி ?
Rate this:
Cancel
Krush - Pallavaram, Chennai,இந்தியா
21-ஜூன்-202111:07:30 IST Report Abuse
Krush இங்க ஏதோ புத்திசாலித்தனமா கேள்வி கேட்ட கூமுட்டைக்கு ஒரு கேள்வி.."கள்ளக்காதலனை வரவழைத்து கணவனை கொன்ற மனைவி கைது" இதுல பேர போட வேண்டாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X