கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (26)
Share
சென்னை: தமிழகத்தில், அமலில் உள்ள ஊரடங்கானது, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மாவட்டங்களில் உள்ள வைரஸ் பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.வகை-1(11 மாவட்டங்கள்) கோவை, நீலகிரி,திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர்,
ஊரடங்கு, தமிழகஅரசு, தளர்வுகள்,

சென்னை: தமிழகத்தில், அமலில் உள்ள ஊரடங்கானது, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

மாவட்டங்களில் உள்ள வைரஸ் பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.


வகை-1(11 மாவட்டங்கள்)


கோவை, நீலகிரி,திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை


வகை 2-(23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்


வகை 3 - (4 மாவட்டங்கள்)


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு


11 மாவட்டங்களுக்கு புது தளர்வு இல்லை


வகை 1 ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டுமே தொடர்ந்து அனுமதிக்கப்படும். புதிய தளர்வுகள் ஏதும் இல்லை.


23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்


வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன், சில நடவடிக்கைகளுக்கான நேர தளர்வுகளுடன் கீழ்கண்ட செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகிறது.

*தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 :00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்படலாம்

*உணவகங்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், பேக்கரிகள்( பார்சல் சேவை மட்டும்) மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், மின்னணு வணிக நிறுவுனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

*அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கும்.

*அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடனும், ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள், வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவுனங்கள், குறுநிதி நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும்.


*காலை 9: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள், ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள், மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், விநியோகஸ்தர்களது கடைகள், அவர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள், கல்வி புத்தகங்கள் மற்றும்எழுதுபொருள் விற்பனை செய்யும் கடைகள், காலணிகள் விற்பனை செய்யும்கடைகள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், மொபைல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும், மண்பாண்டம் மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு, விற்பனை ஆகியவை காலை 9 :00 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

*எலெக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர்கள் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.

*அனைத்து வகையான கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.

*பள்ளி, கல்லூரிகள், பல்கலை மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் நடக்கலாம்

*விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகளை காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்தி கொள்ளலாம்

*திரையரங்குகள், தாசில்தாரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்புபணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

*வாடகை வாகனங்கள், டாக்சிக்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். வாடகை டாக்சிக்களில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும்


latest tamil newsவகை3ல் உள்ள மாவட்டங்களில்வகை3 ல் உள்ள 4 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன், கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

* தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 :00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்படலாம்

* உணவகங்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், பேக்கரிகள்( பார்சல் சேவை மட்டும்) மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், மின்னணு வணிக நிறுவுனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

*குழந்தைகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து, சிறார்களுக்கான கண்காணிப்பு/பராமரிப்பு , சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

*அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாகயாகவும் இயங்கும்.

*அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடனும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள், வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவுனங்கள், குறுநிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும்.

*எலெக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர்கள் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.


*காலை 9: 00 மணி முதல் மாலை 7:00 மணி வரை


*மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள், ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள், மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், விநியோகஸ்தர்களது கடைகள், அவர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள், கல்வி புத்தகங்கள் மற்றும்எழுதுபொருள் விற்பனை செய்யும் கடைகள், காலணிகள் விற்பனை செய்யும்கடைகள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், பாத்திரக்கடைகள், பேன்ஸி, அழகு சாதன பொருட்கள், போட்டோ/வீடியோ கடைகள், சலவைக்கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், மொபைல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும், மண்பாண்டம் மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு, விற்பனை ஆகியவை காலை 9 :00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்படலாம்.

* காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை தேநீர் கடைகள் , சாலையோர உணவுக்கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதி உண்டு

*அழகு நிலையங்கள், சலூன்கள்,குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் எனு்ற நிபந்தனையுடன் காலை காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை செயல்படலாம்

*விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகளை காலை 6:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை நடத்தி கொள்ளலாம்

*பள்ளி, கல்லூரிகள், பல்கலை மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் நடக்கலாம்

*திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்தலாம். படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் அவசியம் கோவிட் பரிசோதனை மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும்
*படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்

*திரையரங்குகள், தாசில்தாரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்புபணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

*சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மாவட்டத்திற்குள் ஏசி வசதி இல்லாமல், 50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்து செயல்படும்

*சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடையே ஏசி வசதி இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படும்

* சென்னை மெட்ரோ ரயில் சேவை 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும்

*வாடகை வாகனங்கள், டாக்சிக்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். வாடகை டாக்சிக்களில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும்


திருமண நிகழ்ச்சிகள்

*திருமண நிகழ்ச்சிகளுக்கு வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம், இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.


இபாஸ் அவசியம்

* நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இபாஸ் பெற வேண்டும்இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X