கோவிட் பாதிப்பால் இறந்தவர்களுக்கு இழப்பீடு: மத்திய அரசு மறுப்பு

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட்டால் இறந்தவர்களுக்கு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.கோவிட்டால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்கும்படி,
கோவிட், மரணம், இழப்பீடு, மத்திய அரசு, உச்சநீதிமன்றம்

புதுடில்லி: கோவிட்டால் இறந்தவர்களுக்கு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கோவிட்டால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்கும்படி, கடந்த மே 24ல் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.


latest tamil news



இந்த வழக்கு தொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்த,183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை, ஏராளமான திட்டங்கள் மூலம் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நிதி செலவு செய்துள்ளன. இதனால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

2021-22 ஆண்டுக்கு அனைத்து மாநிலங்களுக்கான மாநில பேரிடர் மீட்பு நிதியின் மொத்த ஒதுக்கீடே ரூ.22,184 கோடி. கோவிட் பெருந்தொற்றால், 3.85 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கடந்த காலங்களில் எந்தவொரு பேரிடரிலும் இல்லாத வகையில் பெருந்தொற்று பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
எனவே ஒவ்வொரு நபருக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமாால், மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். இழப்பீடு வழங்குவதன் மூலம் கூடுதல் நிதிச்சுமையால், சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி குறையும். இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
21-ஜூன்-202113:57:17 IST Report Abuse
s t rajan சரியான தைரியமான அரசியல் கலப்பில்லாத முடிவு. மத்திய அரசின் இக்கொள்கையை மாநில ஆட்சிகளும் பின்பற்ற வேண்டும். ஊசி, சிகிச்சை இலவசம் கூட வருமான வரி செலுத்த வேண்டிய குறைந்த பட்ச வருட வருமானமாம் Rs. 5 லக்ஷம எட்டாதவர்களுக்குத் தான் கொடுக்கப்பட வேண்டும். எந்த நாட்டிலும் இந்த மாதிரி கடன் தள்ளுபடி, இலவச அரிசி, மின்சாரம், பிறந்தால் இனாம், இறந்தால் இனாம், மணந்தால் இனாம் என்று அள்ளித் தெளிப்பதில்லை. நாடு பூராவும் இலவசங்களை நிறுத்த வேண்டும். மாறாக ஒழுங்காக வரிகட்டுவோர், கடன் திருப்பித் தருவோர், போன்றோரூக்கு மட்டும் தளாளுபடிகள் அளிக்கப் படவேண்டும். ஆதைப்போல் ஏழைகள் நன்கு மதிப்பெண்கள் பெற்றால், அவர்களுக்கு மட்டும் சலுகைகள் தரப்பட வேண்டும்.
Rate this:
mohan - chennai,இந்தியா
21-ஜூன்-202114:49:00 IST Report Abuse
mohanசார், இது எல்லாம் தெரியும்.. மக்களை ஒன்றும் அறியாதவர்களாக / பிட்சை காரர்களாக வைத்திருந்தால் தான் ஒட்டு சாவடிக்கு வருவர்...இந்தியாவை ஜப்பான் ஆகா மாற்ற முடியும் ஐந்து வருடத்தில்... அனால் அதற்கு விருப்பமில்லை.....
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
21-ஜூன்-202111:51:32 IST Report Abuse
Mohan செல்லாது செல்லாது வேணும்னா, நீயே கிணறு வெட்டி உன் புள்ளைய உள்ள தள்ளிவிட்டா,மாநில அரசும் எதிர்கட்சியும் 20+20=40 லட்சமும் அரசு வேலையும் தரும். அதுகூட நீ நாங்களா இருக்கக்கூடாது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-ஜூன்-202108:58:19 IST Report Abuse
duruvasar மத்திய அரசு உச்சநீதி மன்றத்திலேயே இப்படி கூறிவிட்டதால் தமிழக ஊராட்சி அந்த 1 கோடி கொடுப்பதாக தலைவர் அறிவித்திருந்ததை செயல்படுத்த முடியாமல் கைகளை கட்டி போட்டுவிட்டார்கள். இருந்தாலும் தமிழகத்திற்க்கு இதில் விலக்கு அளிக்க வலியுறுத்துவார்கள் என நம்பிக்கையோடு இருப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X