பொது செய்தி

இந்தியா

9 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆந்திராவில் புதுசாதனை

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
அமராவதி: ஆந்திராவில், இன்று நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில், பிற்பகல் 2 மணி வரை 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.ஆந்திராவில், கோவிட் தடுப்பூசி பணியை வேகப்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இன்று(ஜூன் 20) மெகா தடுப்பூசி முகாமிற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி
Record number,  people, vaccinate, Andhra Pradesh,ஆந்திரப் பிரதேசம்,ஆந்திரா, தடுப்பூசி

அமராவதி: ஆந்திராவில், இன்று நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில், பிற்பகல் 2 மணி வரை 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

ஆந்திராவில், கோவிட் தடுப்பூசி பணியை வேகப்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இன்று(ஜூன் 20) மெகா தடுப்பூசி முகாமிற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 5 வயது குழந்தை உடைய தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

காலை 6: 00 மணிக்கு துவங்கிய இந்த முகாமில் பிற்பகல் 2 மணி வரை 9,02,308 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலை 6: 00 மணி வரை முகாம் நடைபெற உள்ளதால், இன்று ஒரே நாளில் மட்டும் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.


latest tamil news




பிற்பகல் 2 மணி நிலவரப்படி.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1.11 லட்சம் பேருக்கும்

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1.08 லட்சம் பேருக்கும்

கிருஷ்ணா மாவட்டத்தில் 93,213 பேருக்கும்

விசாகப்பட்டினத்தில் 84,461 பேருக்கும்

ஸ்ரீகாகுளத்தில் 68,824 பேருக்கும்

சித்தூரில் 58,750 பேருக்கும்,

கர்னூல் மாவட்டத்தில்51,650 பேருக்கும்

ஆனந்தபுரமுவில் 47,502 பேருக்கும்

கடப்பாவில் 42,619 பேருக்கும்

விஜயநகரத்தில் 41,643 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.


latest tamil news




இதன் மூலம், மாநிலத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. 1,06,91,200 பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது. இதனையடுத்து முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1,33,93,359 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த ஏப்.14ல் ஒரே நாளில் 6,28,961 பேருக்கு ஆந்திராவில் தடுப்பூசி போடப்படடது. இதுவே, தேசிய அளவில் சாதனையாக இருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-ஜூன்-202108:07:44 IST Report Abuse
VENKATASUBRAMANIAN தமிழத்தில் இதை விற்று எப்படி காசு பார்க்கலாம் என்று உபிஸ் முயலுவர்கள். இல்லையென்றால் தடுப்பூசி இல்லை என்று பொய் சொல்லுவார்கள்
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
21-ஜூன்-202108:05:36 IST Report Abuse
siriyaar தமிழகத்தில் ஒரே நாளில் 500கோடிக்கு மது விற்று நிகழ்த்திய சாதனையை விடவா?. தமிழன் சுயமரியாதை உள்ளவன் அடுத்தவன் மதிப்பதை பற்றி கவலை கொள்ளாதவன்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
21-ஜூன்-202106:15:10 IST Report Abuse
siriyaar தமிழகத்தில் தனியார் சூதாட்டங்களினால் மக்கள் பாதிக்க்படுவதை தவிர்க்க அரசே லாட்டரியை நடத்தும் , மேலும் பாலியல் குற்றங்கள் மற்றும் கள்ளகாதல் அதிகரிப்பு தடுக்க மும்பை போல் தமிழ்நாட்டில் அனைத்து வார்டிலும் விடுதிகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வந்தாலும் வரும் ஆனால் இந்த மாதிரி எல்லாம் நடக்காது, அது ஆந்திரா இது டாஸ்மாக் நாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X