பலத்தை நிரூபிக்க யாத்திரை நடத்த சிராக் பஸ்வான் முடிவு

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில், லோக் ஜனசக்தி கட்சியில் தனக்கு உள்ள செல்வாக்கை நிரூபிக்க, வரும் ஜூலை 5ல் யாத்திரை நடத்த, மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் முடிவு செய்துள்ளார்.பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியை 2000ம் ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் துவக்கினார். மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் அவர்
சிராக், சிராக்பஸ்வான், லோக்ஜனசக்தி

பாட்னா: பீஹாரில், லோக் ஜனசக்தி கட்சியில் தனக்கு உள்ள செல்வாக்கை நிரூபிக்க, வரும் ஜூலை 5ல் யாத்திரை நடத்த, மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் முடிவு செய்துள்ளார்.

பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியை 2000ம் ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் துவக்கினார். மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து இக்கட்சி தலைவராக ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கட்சிக்கு லோக்சபாவில் சிராக் பஸ்வானுடன் சேர்த்து 6 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 5 எம்.பி.,க்கள் திடீரென சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதிருப்தி எம்.பி.,க்கள் சேர்ந்து ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரும், சிராக் பஸ்வானின் சித்தப்பாவுமான பசுபதிகுமார் பஸ்வானை, பார்லிமென்ட் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். பின்னர், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து இந்த தகவலை தெரிவித்தனர்.


latest tamil news


லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்டார். இதன் மூலம், பசுபதிகுமார் பஸ்வான் தலைமையின் கீழ் லோக் ஜனசக்தி கட்சி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜூ திவாரியை மாநில தலைவராக நியமித்து சிராக் பஸ்வான் உத்தரவிட்டார். பசுபதிகுமார் பராசை லோக்சபா கட்சி தலைவராக நியமித்தது கட்சி விதிகளுக்கு முரணானது எனவும் சபாநாயகருக்கு சிராக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை சிராக் பஸ்வான் கூட்டினார்.இதன தொடர்ந்து, அவர் கூறியதாவது: வரும் ஜூலை 5ம் தேதி எனுது தந்தை ராம்விலாஸ்பஸ்வானின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் ஹாஜிப்பூரில் இருந்து யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த யாத்திரை செல்லும். மக்களின் அன்பும், ஆசிர்வாதமும் எங்களுக்கு தேவை. செயற்குழு கூட்டத்தில் 90 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்று அவர்களது ஆதரவை எனக்கு அளித்தனர். டில்லி, காஷ்மீர் தவிற பிற மாநில தலைவர்கள் எனக்கு ஆதரவு அளித்து உள்ளனர். தற்போது நடக்கும் போராட்டம் மகாபாரதத்தை போன்றது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsஇந்த கூட்டத்தில், பசுபதி பராஸ் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ராம்விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
21-ஜூன்-202108:29:12 IST Report Abuse
M S RAGHUNATHAN யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போல். தன் உயரம் என்ன என்று அறியாதவர். இனிஷியலை வைத்து முன்னேற துடித்தவர்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஜூன்-202106:18:40 IST Report Abuse
sankaseshan நம்மவூரு லிம் இதுதானே நடக்குது அதிகாரம் நம்ம கைவிட்டு போயிற கூடாது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-ஜூன்-202122:44:47 IST Report Abuse
sankaseshan Family drama going to start. On any account party shouldn't go out of Family's clutches .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X