பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி: தமிழகத்துக்கு தருகிறது 'நபார்டு'

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை:'தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டில், நபார்டு வங்கி கடனுதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்' என, நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தலா தெரிவித்துள்ளார்.அவர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 3,000 கோடி ரூபாய் வரை உதவி வழங்குவது குறித்து விவாதித்தார்.

சென்னை:'தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டில், நபார்டு வங்கி கடனுதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்' என, நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தலா தெரிவித்துள்ளார்.latest tamil newsஅவர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 3,000 கோடி ரூபாய் வரை உதவி வழங்குவது குறித்து விவாதித்தார். கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு, நிதி உதவிகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், தமிழகத்திற்கு நபார்டு வங்கி உதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil newsஇது, கடந்த ஆண்டு, 27 ஆயிரத்து, 40 கோடி ரூபாயாக இருந்தது.முதல்வரை சந்தித்த பின், மாநிலத்தின் முக்கிய வங்கி உயர் அதிகாரிகள் உடனான கூட்டத்தில், சிந்தாலா பங்கேற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் ஊரக பகுதிகளில், 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற லட்சியத்தின் அடிப்படையில், நபார்டு வங்கிக்கும், எஸ்.பி.ஐ., வங்கிக்கும் இடையே, சிந்தலா முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ், எஸ்.பி.ஐ., தமிழக தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் கடந்த ஆண்டு, 27 ஆயிரத்து, 40 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், தமிழகத்திற்கு நபார்டு வங்கி உதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. HATS OFF TAMILNADU YOUR CREDIT RATE IS NOW ENHANCED ONE AND HALF TIMES DUE TO REGIME CHANGE
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-ஜூன்-202111:38:25 IST Report Abuse
blocked user எல்லாக்கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது திமுக என்பதை இவர அறியாமல் கடன் கொடுக்கிறாரா? எதற்கும் தலையில் துண்ண்டைப்போட தயாராக இருப்பது நல்லது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21-ஜூன்-202117:32:35 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஅதுஅவங்க பிரச்னை..உங்களுக்கு என்ன வயித்தெரிச்சல்? ஒஹ்ஹ்ஹ் PM கேர் நிதிக்கு அனுப்பலையா? கோவம் புரியுது....
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
21-ஜூன்-202111:11:39 IST Report Abuse
jambukalyan இதை யாரும் திரும்பக் கட்டப்போவதில்லை அப்புறம் அதை கடன் என்று ஏன் சொல்ல வேண்டும்?
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்இலவசம் என்று சொன்னாலே சிலருக்கு பிடிக்காதாம் CAG சும்மா ஒரு கணக்கு வச்சிக்குவாரு அதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X