பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு முழுமையாக 'வாபஸ்' தெலுங்கானாவில் இயல்பு நிலை

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஐதராபாத்:தெலுங்கானாவில் ஊரடங்கு முழுமையாக திரும்பப் பெறப்பட்டுஉள்ளதால், நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 6.12 லட்சமாக உயர்ந்துள்ளது; பலி எண் ணிக்கை 3,556 ஆக உள்ளது.வைரஸ் பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள்
 ஊரடங்கு முழுமையாக 'வாபஸ்' தெலுங்கானாவில் இயல்பு நிலை

ஐதராபாத்:தெலுங்கானாவில் ஊரடங்கு முழுமையாக திரும்பப் பெறப்பட்டுஉள்ளதால், நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 6.12 லட்சமாக உயர்ந்துள்ளது; பலி எண் ணிக்கை 3,556 ஆக உள்ளது.வைரஸ் பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மே 12ம் தேதி, மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பின், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 10 நாட்களாக, இங்கு வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 2,000க்கும் குறைவாக பதிவாகி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுதும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல், முழு ஏற்பாடுகளுடன் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க கல்வித் துறைக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டிருந்தாலும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
21-ஜூன்-202113:08:20 IST Report Abuse
Loganathan Kuttuva தடுப்பூசி தயாரிக்கப்படும் மாநிலம் .
Rate this:
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
21-ஜூன்-202108:56:23 IST Report Abuse
Ganesh G ஊரடங்கை வாபஸ் பெறப்படுவதாலும், அனைத்து கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்பதாலும், மீண்டும் தொற்று அதிகமா பரவ வாய்ப்புள்ளது. தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்ட பிறகே கல்வி நிறுவனங்களைத் திறக்க வேண்டும். இது மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
21-ஜூன்-202106:12:17 IST Report Abuse
 N.Purushothaman முழு ஊரடங்கு தளர்வு அழிவிற்கு இட்டு செல்லும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X