சோனியாவுக்கு குர்ஷித் ஆதரவு மூத்த தலைவர்கள் மீது பாய்ச்சல்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி:''ஒருவரை கேள்வி கேட்பதால் மட்டும் கட்சியில் சீர்திருத்தம் ஏற்படுத்த முடியாது,'' என, கபில் சிபல் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் 23 பேருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பதில் அளித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி, தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 'கட்சியின் அமைப்புகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம்' என, மூத்த தலைவர்கள்
 சோனியா, குர்ஷித்,ஆதரவு,மூத்த தலைவர்கள் , பாய்ச்சல்

புதுடில்லி:''ஒருவரை கேள்வி கேட்பதால் மட்டும் கட்சியில் சீர்திருத்தம் ஏற்படுத்த முடியாது,'' என, கபில் சிபல் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் 23 பேருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 'கட்சியின் அமைப்புகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம்' என, மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு, கபில் சிபல் உள்ளிட்ட 23 தலைவர்கள், கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர்; இது, அப்போது கட்சிக்குள் பெரும் புயலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி உள்ளிட்டோர், 'காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை' என தெரிவித்தனர்.இந்நிலையில் சோனியா, ராகுலின் தீவிர ஆதரவாளரும், கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் கூறியதாவது:

ஒருவரை கேள்வி கேட்பதால் மட்டும் கட்சியில் சீர்திருத்தம் ஏற்பட்டு விடாது. கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி, அனைவரும் கலந்து ஆலோ சித்து முடிவு செய்ய வேண்டும். கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராகுல் தான் முடிவு செய்ய வேண்டும். கட்சியின் தலைவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர் தான் எங்களின் தலைவர்.

உடலில் என்ன பிரச்னை, நோய் என்பதை கண்டுபிடித்த பின் தான், அறுவை சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொள்வர். அதுபோல் கட்சியில் உள்ள பிரச்னைகளை முதலில் கண்டறிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
21-ஜூன்-202119:38:35 IST Report Abuse
sankaseshan இது மாதிரி அப்பப்ப சொல்லலை என்றால் இத்தாலிய குடும்பம் இவரை ஓரம் கட்டி விடும்
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
21-ஜூன்-202118:06:27 IST Report Abuse
thamodaran chinnasamy இத்துணை நாட்கள் இவரை காணவில்லையே , அப்போது இவருக்கு இங்கு நடந்தது எதுவும் தெரியாது , சொன்னாலும் புரியாது.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
21-ஜூன்-202117:13:44 IST Report Abuse
M S RAGHUNATHAN அது சரி. உங்கள் மனைவி நடத்திய NGO விவகாரம் என்ன ஆயிற்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X