'நீட்' தேர்வு உண்டா; இல்லையா? உறுதி தர முடியாது என்கிறார் மந்திரி

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை:''நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதை தற்போது உறுதியாக சொல்ல முடியாது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை, பெருங்குடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: சென்னையில் 1,324 பேர்
 'நீட்' தேர்வு உண்டா; இல்லையா?  உறுதி தர முடியாது என்கிறார் மந்திரி

சென்னை:''நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதை தற்போது உறுதியாக சொல்ல முடியாது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, பெருங்குடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி: சென்னையில் 1,324 பேர் உட்பட, தமிழகத்தில் 11 ஆயிரத்து 490 தொழுநோயாளிகள் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து கொடுக்கப்படுகிறது. எந்த பாதிப்பும் இல்லைஅவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட உள்ளது.'நீட்' தேர்வு வேண்டாம் என்பது தான், தி.மு.க.,வின் நிலைபாடு. இந்த தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பிரதமரை சந்தித்தும் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிமிடம் வரை, நீட் தேர்வு இருக்கவே செய்கிறது. இந்தாண்டு நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதியாக கூற முடியாது. தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்; தேர்வு இல்லை என்ற அறிவிப்பு வந்தால், தயாரான மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.


நடவடிக்கை

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 20 நாட்களில் அறிக்கை தர உள்ளது. அதன்பின், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அப்போது தான், நீட் தேர்வு குறித்து உறுதியாக சொல்ல முடியும்.


முதல்வர் முயற்சி

நீட் தேர்வு இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் முயற்சித்து வருகிறார். கொரோனா தொற்றால் 60 வயதை கடந்தவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகமாக உயிரிழந்துள்ளனர். அதனால், அப்பிரச்னை உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கண்டிப்பாக தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் 2,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நோய்க்கான மருந்துகள்தேவையான அளவில் உள்ளன.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.


'நவம்பர் வரை பாதுகாப்பாக இருங்கள்!'

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், பூஜ்ஜிய தாமத அறை, தீவிர சிகிச்சை பிரிவு போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை, முதல்வர் ஸ்டாலின், ஆய்வு செய்தார்.அப்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னேற்பாடுகள் குறித்து விவரித்தனர்.

பின், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:கொரோனா தொற்றின் மூன்றாம் அலையை எதிர்கொள்ள, அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைக்கு 25 படுக்கைகள் உட்பட 100 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, குழந்தைகளுக்காக 3,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு 5 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. தடுப்பூசி செலுத்துவதில், சென்னை முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். நவ., வரை கூடுதல் பாதுகாப்புடன் இருந்தால், இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

குழந்தைகளுக்கு பாதிப்பு வராது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறினாலும், மூன்றாவது அலையால் குழந்தைகள் மட்டும் தான் பாதிப்பர் என்றில்லை. குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போட நாம் தயாராக இருக்க வேண்டும்.ஜன., - பிப்., மாதங்களில், திருமண நிகழ்ச்சிகளில் கூட்டமாக சென்று இரண்டாம் அலைக்கு வித்திட்டது பொதுமக்கள் தான். எனவே, மூன்றாவது அலையை தடுக்க தயாராக இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
21-ஜூன்-202123:00:14 IST Report Abuse
unmaitamil எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ??? இவர்களின் பொய் பித்தலாட்டதாலேயே இவர்கள் அழிவார்கள். அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றிய பாவமே இவர்களை அழித்துவிடும். இந்த திருடர்களின் பொய்களை மக்களுக்கு உணர்த்தவே ஆண்டவன் இந்த திருட்டு கூட்டத்தை இந்தத்தடவை ஆள்வதற்கு அனுமத்தித்துள்ளான். இதோடு தீய சக்தி ஒழியும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஜூன்-202119:41:57 IST Report Abuse
sankaseshan உறுதி கொடுத்தாலும் உடனேயே நிறைவேற்றி கிழிச்சிருவீங்க .
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
21-ஜூன்-202118:42:00 IST Report Abuse
raghavan முதலில் தடுப்பூசி போடும் இடங்களில் வீணா கூட்டத்தை கூட்டி விளம்பரம் தேடாதீங்க. என் உறவினர் இந்த மாதிரி கூட்டத்தை பார்த்து தடுப்பூசி போடாமல் மையத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார். மூன்று நாட்களில் அவருக்கு கொரோனா அடுத்த இரண்டு நாட்களில் மொத்த குடும்பத்திற்கும் கொரோனா எல்லோரும் மருத்துவ மனையில் அட்மிட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X