கிலோ வாழைப்பழம் ரூ. 3,336: வட கொரியாவில் கடும் பஞ்சம்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சியோல்:கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் பஞ்சம் நிலவுகிறது; பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. 1 கிலோ வாழைப்பழம், 3,336 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .உரத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக உரம் தயாரிக்க, ஒவ்வொரு விவசாயியும் தினமும் 2 லிட்டர் சிறுநீர் அளிக்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.வட கொரியாவில் கிம் ஜங் யுன், 37,

சியோல்:கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் பஞ்சம் நிலவுகிறது; பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. 1 கிலோ வாழைப்பழம், 3,336 ரூபாய்க்கு விற்கப்படுகிறது



latest tamil news



.உரத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக உரம் தயாரிக்க, ஒவ்வொரு விவசாயியும் தினமும் 2 லிட்டர் சிறுநீர் அளிக்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.வட கொரியாவில் கிம் ஜங் யுன், 37, தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி, அணு ஆயுத தயாரிப்பில் வட கொரியா ஈடுபட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதன் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் பல நாடுகளில் இருந்து உதவிகளும், பொருட்களும் கிடைப்பது நின்றன.வடகொரியாவில், மருத்துவ கட்டமைப்பு மிக மோசமாக உள்ளது.

சீனாவில், 2019 டிசம்பரில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து, 2020 துவக்கத்தில் அண்டை நாடான சீனாவில் இருந்து வைரஸ் பரவுவதை தடுக்க, தன் எல்லையை வட கொரியா மூடியது.'இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை' என, வட கொரியா கூறி வருகிறது. அதே நேரத்தில் எல்லையை மூடியதால், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொருட்கள் வருவது நின்றன.முக்கியமாக உணவு, உரம், எரிபொருள் உள்ளிட்டவை வருவது நின்றன.

இந்நிலையில், கடந்தாண்டு பல சூறாவளி, வெள்ளம் என இயற்கை சீற்ற பாதிப்பும் அதிகமாக இருந்தது. அதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டது.இவையனைத்தும் சேர்ந்து, தற்போது வட கொரியாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு ௧ கிலோ வாழைப்பழம் 3,336 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிளாக் டீ ஒரு பாக்கெட் 5,167 ரூபாய்க்கும்; காபி 7,381 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

இவ்வாறு பல உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; அத்துடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வட கொரிய மக்கள், தினமும் இரண்டு வேளை மட்டும் கஞ்சி போன்ற உணவை சாப்பிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உரத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக உரம் தயாரிக்க, ஒவ்வொரு விவசாயியும் தினமும் 2 லிட்டர் சிறுநீர் அளிக்கும் படி, அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



கடந்த 1990களில், சோவியத் யூனியன் சிதறுண்டபோது, வட கொரியாவுக்கு தேவையான பொருட்கள் வினியோகம் தடைபட்டது. அதனால், அப்போது கடும் பஞ்சத்தை வட கொரியா சந்தித்தது; ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது அது போன்ற கடுமையான பஞ்சத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
25-ஜூன்-202113:01:34 IST Report Abuse
திரு.திருராம் ஒரு நாளைக்கு 2லிட்டர் வருமா, 2லிட்டர் வரணும்னா எத்தினி லிட்டர் தண்ணி குடிக்கணும், அவ்வளவு தண்ணியாவது கிடைக்குதா அங்க, நிறைய தரவுகள் மிஸ்ஸிங்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-ஜூன்-202116:50:39 IST Report Abuse
J.V. Iyer கஞ்சா, வெடிமருந்து, ராக்கெட் எரிபொருள், அனுசத்தி பாகங்கள் எல்லாம் மலிவு. எளிதில் கிடைக்கும்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஜூன்-202116:22:21 IST Report Abuse
g.s,rajan அப்படியே நீங்க கண்டுபிடித்து உள்ள அணு ஆயுதத்தை வைத்து உங்க நாட்டு மக்களையே கொன்னுடு சர்வாதிகாரியே ஒரு நாட்டில் மக்களுக்கு உணவு முக்கியமா ???இல்லை அணுஆயுதம் முக்கியமா ???இனியாவது மற்ற நாடுகள் வட கொரிய நாட்டைப் பார்த்து திருந்தட்டும் ,அணு ஆயுதம் தயாரிக்கிறேன் ராக்கெட் உடறேன் ஏவுகணை தயாரிக்கிறேன்னு தேவை இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடாது நாட்டில் மக்கள் உயிர் வாழ உணவு இருக்கா ???என்று மக்களை நினைத்து செயல்படனும் .இல்லையேல் நாட்டில் பசி பட்டினி பஞ்சம் நிச்சயம் தலை விரித்து ஆடும் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X