'டெல்டா பிளஸ்' பரவலாம்: எய்ம்ஸ் தலைவர் கவலை

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி:''போதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால், புதிதாக உருமாறியுள்ள, 'டெல்டா பிளஸ்' வகை கொரோனா வைரஸ், ஆபத்தான முறையில் பரவும் அபாயம் உள்ளது,'' என, எய்ம்ஸ் இயக்குனர், டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.கொரோனா வைரஸ் இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இது குறித்து, டாக்டர் ரன்தீப்
Corona Virus, India Fights Corona, 3rd Wave

புதுடில்லி:''போதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால், புதிதாக உருமாறியுள்ள, 'டெல்டா பிளஸ்' வகை கொரோனா வைரஸ், ஆபத்தான முறையில் பரவும் அபாயம் உள்ளது,'' என, எய்ம்ஸ் இயக்குனர், டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இது குறித்து, டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளதாவது: நம் நாட்டில் தற்போது காணப்படும், 'டெல்டா' எனப்படும், பி.1.617.2 வகை கொரோனா வைரஸ், பிரிட்டனில் தென்பட்ட வைரசில் இருந்து உருமாறியது; அது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 'கே - 417 - என்' எனப்படும், 'டெல்டா பிளஸ்' உருமாறிய வைரஸ் தென்பட்டுள்ளது. இது ஆபத்தானதாக இல்லை என கூறப்படுகிறது. ஆனால், பிரிட்டனில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.இரண்டாவது அலை அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. அதற்குள் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. நாம் எச்சரிக்கையாகவும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும்.

எந்தளவுக்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதோ, அந்தளவுக்கு புதிய டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் ஆபத்தாக மாறுவதை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


மஹா.,வில் மூன்றாவது அலை?


புதிதாக உருமாறியுள்ள, 'டெல்டா பிளஸ்' கொரோனா வைரஸ் பாதிப்பு, மஹாராஷ்டிராவில் ஏழு பேருக்கு இருப்பது தெரியவந்துள்ளது. ரத்னகிரி மாவட்டத்தில் மட்டும், ஐந்து பேருக்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.'புதிய வகை வைரஸ் பரவல், மூன்றாவது அலைக்கு காரணமாக அமையும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இருந்தால், பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். இந்த புதிய வகை வைரசால் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்; அதில், 10 சதவீதம் பேர் குழந்தைகளாக இருப்பர்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Tirunelveli, Tamil Nadu,இந்தியா
21-ஜூன்-202119:36:43 IST Report Abuse
Indian நீங்கள் போக கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு. ஒரு சில இடங்களில் மழை வரலாம், வராமலும் இருக்கலாம். இதுபோன்ற வாக்கியங்கள் தன்னை மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு என்று அனைவருக்கும் தெரியும். அதே போல் .......
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-ஜூன்-202111:43:28 IST Report Abuse
blocked user இப்படி பயம்காட்டவில்லை என்றால் ஒரு பயல் மாஸ்க் போடமாட்டான், சமூக இடைவெளியைக்கூட விடமாட்டான்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஜூன்-202110:14:28 IST Report Abuse
அசோக்ராஜ் தில்லி கோடாங்கியின் டெய்லி புல்லெட்டின். எங்கள் ஓட்டக்கலை நிபுணர் வஸ்தாது சொல்ற வரைக்கும் நாங்க எதையும் நம்ப மாட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X