நல்ல பெயர் எடுக்க முடியாதா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நல்ல பெயர் எடுக்க முடியாதா?

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (1)
Share
'பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்த கதையாக ஆகி விட்டதே' என, புலம்புகிறார் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி.இந்த மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. 'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எங்களுக்கு எதிர்க்கட்சிகளே தெரியவில்லை' என, உற்சாகத்துடன் கூறி வருகிறார் சந்திரசேகர
 அக்கம் பக்கம்

'பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்த கதையாக ஆகி விட்டதே' என, புலம்புகிறார் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி
.இந்த மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. 'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எங்களுக்கு எதிர்க்கட்சிகளே தெரியவில்லை' என, உற்சாகத்துடன் கூறி வருகிறார் சந்திரசேகர ராவ். இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிப்பதற்காக தெலுங்கு தேசம் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது. அதிலும் தெலுங்கானா மாநில காங்., தலைவர் உத்தம் குமார் ரெட்டி, இந்த விஷயத்தில் கட்சி மேலிடத்திடம் பாராட்டு பெறுவதற்காக ரொம்பவே தீவிரமாக உள்ளார்.

சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, ஐதராபாதில் காங்., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.இதில் சில தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு, 'பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் இரு சக்கர வாகனங்கள் பயன்பாடற்று போய் விட்டன' என கூறியபடி, சில இரு சக்கர வாகனங்களை ஏரியில் துாக்கி வீசினர். இந்த விவகாரம் தான், இப்போது உத்தம் குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

'ஒன்றுக்கும் உதவாத இரு சக்கர வாகனங்களை ஏரியில் துாக்கி வீசியதன் வாயிலாக, நீரை மாசுபடுத்தி விட்டனர்' என, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 'மக்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என நினைத்தால், இப்படி கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டனரே' என, சோகத்தில் ஆழ்ந்துள்ளார் உத்தம் குமார் ரெட்டி.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X