பொது செய்தி

இந்தியா

'நீண்ட நாள் தொற்று பாதிப்பு சிறுநீரக கோளாறை ஏற்படுத்தும்' : மருத்துவர்கள் எச்சரிக்கை

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை-'கொரோனா தொற்றுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்வது அவசியம்' என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு, சில நாட்களுக்கு பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக,

மும்பை-'கொரோனா தொற்றுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்வது அவசியம்' என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.



latest tamil news


கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு, சில நாட்களுக்கு பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக, 'கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி, நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தவர்கள், குணமடைந்த பின் மிக கவனமாக இருக்க வேண்டும்' என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து, மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அதுல் இன்கேல் கூறியதாவது:கொரோனாவுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்குள் சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.


latest tamil news


சிறுநீரக கோளாறுகளில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஆறு மாதங்களுக்கு பின், பரிசோதனை மேற்கொள்ளும் போது, 'டயாலிசிஸ்' செய்ய வேண்டிய அளவுக்கான தீவிர பாதிப்பு நிலைக்கு சிலர் சென்றுவிடுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஜூன்-202110:08:10 IST Report Abuse
அசோக்ராஜ் சாம்பார் உண்பவர்களைக் கொரோனா தாக்காது என்றும், தாக்கினாலும் பாதிக்காது என்றும், பாதித்தாலும் குணமாகிவிடும் என்றும், அதன் பிறகு கிட்னி பிரச்சினை எதுவும் வராதென்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சித்தரஞ்சன் லோகோமோடிவ் உறுதிப் படுத்துகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X