கிடையாது!* கொரோனா பலிக்கு இழப்பீடு... * உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி:'மத்திய, மாநில அரசுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தில், 2005ல் செய்யப்பட்ட திருத்தத்தின் கீழ், பேரிடரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, குறைந்தபட்ச இழப்பீடாக 4 லட்சம் ரூபாய்
 கிடையாது!,கொரோனா பலி, இழப்பீடு,உச்ச நீதிமன்றம், மத்திய அரசு

புதுடில்லி:'மத்திய, மாநில அரசுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டத்தில், 2005ல் செய்யப்பட்ட திருத்தத்தின் கீழ், பேரிடரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, குறைந்தபட்ச இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் வழங்க, சட்டம் வழி செய்கிறது.கொரோனா பெருந்தொற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, தொற்றுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு, தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


உத்தரவு

மேலும், கொரோனா மரணங்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழ்களில், ஒரே விதமான வழிமுறை நாடு முழுதும் பின்பற்றப்பட வேண்டும் எனக் கோரி, பல்வேறு மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொரோனா இழப்பீடு மற்றும் இறப்பு சான்றிதழ் அளிக்கும் விவகாரத்தில், மத்திய அரசின் கொள்கை குறித்து விளக்கம்
அளிக்கும்படி உத்தரவிட்டது.இது தொடர்பாக, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி, குறைந்த பட்ச நிவாரணமாக பல்வேறு உதவிகளை
மத்திய அரசு செய்து வருகிறது.நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது, ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பேரிடர் மேலாண்மை சட்டப்படி நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது பொருந்தும்.

கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கிறது என்ற காரணத்திற்காக, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க இயலாது.கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்கி விட்டு, இதர நோய்களினால் இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றால், அதுவும் நியாயமானதாக இருக்காது.அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரச் செலவுகள்
அதிகரித்துள்ளன. வரி வருவாய் கடுமையாக சரிந்துள்ளது. இந்த நேரத்தில், கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது முடியாத காரியம்.

நம்மிடமுள்ள அரிய வளங்களை பயன்படுத்தி, லட்சக்கணக்கானோர் குடும்பங்களுக்கு,
4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினால், நாளை தொற்று தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை உள்ளிட்ட இதர தேவைகளை சிறப்பாக செய்ய முடியாத நிலை உருவாகக்கூடும்.இது, பலன் அளிப்பதை விட, நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பது உறுதி. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள், சமூக பாதுகாப்பு, பொருளாதார நிலையில் அவர்கள் மீள்வதற்கு
உதவுவதே, பரந்த நோக்கம் உடைய திட்டங்களாகும்.


அபராதம்

பல உலக நாடுகள் இந்த நடைமுறையினைத் தான் பின்பற்றி நிவாரணங்கள் வழங்கி
வருகின்றன. அதே நடைமுறையை தான் மத்திய அரசும் பின்பற்றி வருகிறது.'கொரோனாவால் உயிர்இழந்தோரின் இறப்பு சான்றிதழில், உயிரிழப்புக்கான காரணம் தொற்று பாதிப்பு என்பதை குறிப்பிட வேண்டும்' என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் டாக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஜூன்-202121:40:19 IST Report Abuse
g.s,rajan மோடிஜி இல்லேன்னா இந்தியாவில் ஆட்சி நடக்காதா ??? ஜி,எஸ்,ராஜன் சென்னை
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஜூன்-202119:56:27 IST Report Abuse
g.s,rajan ஏன் மக்கள் நிதி நெருக்கடியில் தான் இருக்கின்றனர் ,வருமானம் இல்லாமல் இருக்கின்றனர் ,வேலை இல்லாமல் இருக்கின்றனர் ,தொழில் இல்லாமல் இருக்கின்றனர் எங்களால் அரசுக்கு வரிகளை செலுத்த முடியாது என்று கூறினால் அரசாங்கத்தில் விட்டுவிடுவார்களா ???கழுத்தில் கத்தியை வைத்து அசலும் வட்டியுமாய் வசூலித்து விடுவார்கள் தெரியுமா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
21-ஜூன்-202112:37:41 IST Report Abuse
rajan மத்திய அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், மோடிக்கு கட்டப்படும் குடிசை பல ஆயிரம்கோடி செலவில் உடனடியாக கட்டப்படும்
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
21-ஜூன்-202113:10:40 IST Report Abuse
RaajaRaja Cholanவேறு எதையும் சேர்த்து யோசி, அந்த ஆளு மட்டுமே இந்தியா இல்லை...
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
21-ஜூன்-202113:16:43 IST Report Abuse
RaajaRaja Cholanஉனக்கு மோடி பைத்தியம் என்று நினைக்கையில், உன் கனவிலும் அவர் வருவாரோ ....
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
21-ஜூன்-202114:25:51 IST Report Abuse
Dhurveshஆமாம் அதனால் தான் ஒரு ஆல் சென்று வர சொகுசு விமானம் 8400 கோடி / 50000 கோடி சொகுசு வீடு எஞ்சாமி எஞ்சாம் i...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X