இது உங்கள் இடம்: அதற்கு இரண்டு காரணங்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அதற்கு இரண்டு காரணங்கள்!

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (57)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:ராணுவம், காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்றால், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் உடல் தகுதியை அவசியம் பெற்றிருக்க வேண்டும். இதைப் போலவே மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிய, அதற்குரிய படிப்பு மற்றும் தேர்வு
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ராணுவம், காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்றால், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் உடல் தகுதியை அவசியம் பெற்றிருக்க வேண்டும். இதைப் போலவே மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிய, அதற்குரிய படிப்பு மற்றும் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி அடைய வேண்டும்.சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க, மிகக் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, படிப்படியாக முன்னேற வேண்டும்.மேற்கண்டவை போல தான், மக்கள் உயிரை காப்பாற்றும் மருத்துவர் படிப்பிற்கு, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இது, நாடு முழுதும் நடக்கிறது.

அதில் தமிழகத்திற்கு மட்டும் எதற்கு விதிவிலக்கு? தரமான மருத்துவர்கள் உருவாக வேண்டும் என்பதால், நீட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதை வரவேற்க வேண்டியது தானே, தொலைநோக்கு சிந்தனையுடைய அரசியல் கட்சிகளின் பணி.அதை விடுத்து, தமிழக மாணவர்கள் மட்டும் நீட் தேர்வு எழுதக் கூடாது என, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அடம் பிடிப்பது ஏன்?தமிழகத்தில் கல்வித் தரம் குறைவாக உள்ளதா; தேசிய அளவிலான தேர்வில் பங்கேற்க முடியாத அளவிற்கு, நம் மாணவர்கள் அறிவுத்திறன் அற்றவர்களா?நாட்டிலுள்ள பிற மாநிலங்களில், நீட் தகுதி தேர்வு உண்டு. அந்த மாநிலங்களில் கிராமப்புற மாணவர்கள் இல்லையா என்ன?தமிழக அரசியல்வாதிகள் நீட் தேர்வை எதிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்.

ஒன்று, அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள், தரமான கல்வி கொள்கையை வகுத்து, சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க தவறிவிட்டன.இரண்டாவது, நீட் தேர்வால் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் பாதிக்கப்படுவதால், ஆளுங்கட்சிக்கு கிடைக்க வேண்டிய நன்கொடை தடைபடுகிறது.தமிழக கிராமப்புற மாணவர்கள் அறிவாற்றல் குறைந்தோர் என, தி.மு.க., அரசு கருதுவது ஏமாற்று வேலையாகும்.


latest tamil news


மிகவும் கடினமான ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது இல்லையா? 'கிராமப்புற மாணவர்களின் அறிவுத்திறன் குறைவு' என விதாண்டாவாதம் செய்தால், அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டியது அரசின் கடமை தானே!நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது, வேண்டாத வேலை. அந்த குழுவின் அறிக்கையால் எந்த மாற்றமும் ஏற்படாது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X