பொது செய்தி

இந்தியா

வருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணத்தை, வேலையை இழந்தோரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலால், கடந்த ஆண்டு கடும் பொருளாதார பாதிப்பை சந்திக்க நேர்ந்தது.அப்போது, தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளும் வசதியை, வருங்கால வைப்பு நிதி அளித்தது. அவ்வாறு எடுக்கும் தொகையை திருப்பிச் செலுத்த

புதுடில்லி-பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணத்தை, வேலையை இழந்தோரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


கொரோனா வைரஸ் பரவலால், கடந்த ஆண்டு கடும் பொருளாதார பாதிப்பை சந்திக்க நேர்ந்தது.அப்போது, தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளும் வசதியை, வருங்கால வைப்பு நிதி அளித்தது. அவ்வாறு எடுக்கும் தொகையை திருப்பிச் செலுத்த தேவையில்லை.தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.


latest tamil news


இந்த நிலையில், தங்கள் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து, அதிகபட்சம் 75 சதவீதம் எடுத்துக் கொள்ள, வருங்கால வைப்பு நிதியம் கடந்த மாதம் அனுமதி அளித்துள்ளது.'வேலையை இழந்து கணக்கில் வரவு செலுத்தப்படாதவர்களும், தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்' என, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.'கணக்கை முடிக்காமல் உள்ளதால் பென்ஷனுக்கான தகுதியும் தொடரும் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
21-ஜூன்-202110:31:00 IST Report Abuse
மதுரை விருமாண்டி ரிட்டையர் ஆனதுக்கப்புறம் பிச்சையெடுப்பாங்களா மோடிஜி? மேலை நாடுகளே அவர்களின் மக்களுக்கு குடும்பங்களுக்கு லட்சக்கணக்கில் நிவாரணம் அளிக்கின்றது. ஆனால் இவருக்கு கிள்ளித் தரக்கூட மனசில்லை. இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்கள் நிறுவனங்களுக்கு இதுவரை கோவிட் பேரை சொல்லி 15 லட்சம் கோடி வரை கடன் தள்ளுபடி, சலுகை, புது கடன் என்று அள்ளி கொடுத்த மகராசர், மக்கள்ன்னு வரும் போது பெட்ரோல் விலையை ஏத்தி, தடுப்பூசி தட்டுப்பாட்டை உருவாக்கி, பெருந்தொற்றை முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பாக்கிய மோடிஜி. பாவம் மக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X