வருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி-பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணத்தை, வேலையை இழந்தோரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலால், கடந்த ஆண்டு கடும் பொருளாதார பாதிப்பை சந்திக்க நேர்ந்தது.அப்போது, தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளும் வசதியை, வருங்கால வைப்பு நிதி அளித்தது. அவ்வாறு எடுக்கும் தொகையை திருப்பிச் செலுத்த

புதுடில்லி-பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணத்தை, வேலையை இழந்தோரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


கொரோனா வைரஸ் பரவலால், கடந்த ஆண்டு கடும் பொருளாதார பாதிப்பை சந்திக்க நேர்ந்தது.அப்போது, தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளும் வசதியை, வருங்கால வைப்பு நிதி அளித்தது. அவ்வாறு எடுக்கும் தொகையை திருப்பிச் செலுத்த தேவையில்லை.தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.


latest tamil news


இந்த நிலையில், தங்கள் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து, அதிகபட்சம் 75 சதவீதம் எடுத்துக் கொள்ள, வருங்கால வைப்பு நிதியம் கடந்த மாதம் அனுமதி அளித்துள்ளது.'வேலையை இழந்து கணக்கில் வரவு செலுத்தப்படாதவர்களும், தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்' என, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.'கணக்கை முடிக்காமல் உள்ளதால் பென்ஷனுக்கான தகுதியும் தொடரும் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X