பொது செய்தி

இந்தியா

புதிய ஐ.டி., சட்டம் குறித்து ஐ.நா.,வுக்கு அரசு கடிதம்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி-'சமூக வலைதளங்களை பயன்படுத்தும் சாமானியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்திலேயே, புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன' என, ஐ.நா.,வுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, மத்திய அரசு சட்ட திட்டங்களை

புதுடில்லி-'சமூக வலைதளங்களை பயன்படுத்தும் சாமானியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்திலேயே, புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன' என, ஐ.நா.,வுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news


'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, மத்திய அரசு சட்ட திட்டங்களை சமீபத்தில் நிறைவேற்றியது. அனைத்து சமூக வலைதளங்களும், அரசின் புதிய விதிமுறைகளை ஏற்று நடப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில், 'டுவிட்டர்' நிறுவனம் மட்டும், முரண்டு பிடித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் கவலை அளிப்பதாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலை சேர்ந்த அதிகாரிகள், சமீபத்தில் கவலை தெரிவித்தனர்.இதையடுத்து, மத்திய அரசு தரப்பில் இருந்து, ஐ.நா.,வுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதன் விபரம்:சமூக வலைதளங்கள் உள்ளிட்ட, 'டிஜிட்டல்' ஊடகங்கள் வாயிலாக, குழந்தைகள், பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். ஆபாச புகைப்படங்கள், காட்சிகள் பகிரப்படுகின்றன. பயங்கரவாத குழுக்களுக்கு ஆட்கள் திரட்டப்படுகின்றனர். பொருளாதார குற்றங்கள் அதிகரித்துள்ளன. நாட்டின் அமைதி குலைக்கப்பட்டு வன்முறை துாண்டப்படுகிறது.


latest tamil news


எனவே, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடமும், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கருத்துகளை கேட்டது. அதன் அடிப்படையில், இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் வகுக்கப்பட்டுஉள்ளன. சமூக வலைதளங்களால் பாலியல் அத்துமீறலுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகும் சாமானியர்களுக்கு நியாயம் கிடைக்கவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்கும் நோக்கத்திலேயே, இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூன்-202108:10:06 IST Report Abuse
ஆப்பு ஆபாசப் படங்களை ஊடகத்தில் வெளியிடுபவர்களைப் பிடிக்கத் துப்பில்லை. புடிபட்ட பப்ஜி மதனை ஒரு வாரத்தில் தூக்கில் போட தில் இல்லை. நிர்பயா குற்றவாளிகளை தண்டிக்க ஏழு வருஷத்துக்கு முக்குனாங்க. பொள்ளாச்சி, மவுலிவாக்கம் குற்றவாளிகள் பாதுகாப்பா ஜெயிலல் இருந்தே செத்துப் போவாங்க. இந்த லட்சணத்துலே ஐ.நா வுக்கு கடிதமெழுதறாங்களாம். வெளங்கிரும்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
22-ஜூன்-202103:52:45 IST Report Abuse
NicoleThomson ஐநாவிற்கு வேற வேலை இல்லையா? கொரோனா போன்ற வைரஸ்களை உருவாக்கி பரப்பி விடும் சீனாவினை ஏன் என்று கேட்க துப்பில்லை , சரிப்பா வைரஸ் போன்ற இந்த ஒருதலைப்பட்சமான twitter போன்றவர்களை அடக்கிவைக்க கூட துப்பில்லாத வெக்கம் கெட்டவர்கள் தான் இந்த ஐநா என்று சொல்லலாமா?
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
21-ஜூன்-202110:32:47 IST Report Abuse
sahayadhas முடியாது , தமிழ் நாட்டு கோரிக்கை ஏற்றாயா? '
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X