தொகுதி மறுவரையறை குறித்தே அனைத்து கட்சி கூட்டத்தில் பேச்சு

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி-'பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்வது குறித்தே விவாதிக்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 24ம் தேதி, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

புதுடில்லி-'பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்வது குறித்தே விவாதிக்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



latest tamil news


ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 24ம் தேதி, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பதற்கான சூழ்நிலை உருவாகவில்லை. அதனால் அது குறித்து பேசப்பட்டாலும், முடிவு ஏதும் எடுக்கப்படாது.சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு முன், தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.

இதற்காக கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாகவே அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.மெஹபூபாவுக்கு அதிகாரம்அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மெஹபூபா முடிவெடுக்க, கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


latest tamil news




பாக்., எதிர்ப்பு



பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறியுள்ளதாவது:ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதே சட்டவிரோதம். இது தொடர்பாக, சர்வதேச அமைப்புகளில் முறையிட்டு வருகிறோம். காஷ்மீரின் நிலப்பரப்பை மாற்றும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
21-ஜூன்-202115:59:50 IST Report Abuse
madhavan rajan பாகிஸ்தானின் அடாவடி தொடர்கிறது. ஒரு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தால் மூன்றாவது மாவட்டக்காரன் நான் அதை ஏற்க மாட்டேன் என்று சொல்வது போல இருக்கிறது.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
21-ஜூன்-202114:47:03 IST Report Abuse
Ellamman பாண்டிச்சேரியில் இன்னும் அரசு அமைக்க ஏன் முடியவில்லை?/ எவ்வளவு மக்கள் நலனுடன் செயல்படுகிறீர்கள்? அட அட அப்படியே புல்லரிக்குது
Rate this:
Cancel
முன்னேறுங்கள் மோடி ஜி காஷ்மீரில் VP சிங் காலத்தில் முப்தி மகள் கடத்தல் நாடகத்தில் தொடங்கி பற்றி எரிந்த 🔥 தீ இன்று அனைக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதிகள் வால் அறுக்கப்பட்டுள்ளது, வாழ்க மாவீரன் மோடிஜி.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
21-ஜூன்-202121:00:36 IST Report Abuse
Dhurveshஅப்படியா அப்போ வாஜ்பாய் காலத்தில் காந்தகார் விவகாரம் எல்லாம் மறந்து விட்டேர்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X