பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு முழு ஊரடங்கினை அமல் படுத்தி வந்தது. இந்நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று குறைவாக உள்ளதால் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் வரும் ஜூன் 28 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர்,

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு முழு ஊரடங்கினை அமல் படுத்தி வந்தது. இந்நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று குறைவாக உள்ளதால் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் வரும் ஜூன் 28 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.latest tamil news


அதன் படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று குறையாமல் இருப்பதால் அங்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும். கூடுதல் தளர்வுகள் கிடையாது.

இரண்டாவதாக அரியலுார், கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருவண்ணாமலை, துாத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலுார், விருதுநகர், ஆகிய 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளோடு சில செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்கும் கடைகள் காய்கறி, பழம் மற்றும் பூ விற்கும் நடைபாதை கடைகள், காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை செயல்படலாம். உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பார்சல் சேவை மட்டும், காலை 6:00 முதல், இரவு 9:00 மணி வரை அனுமதிக்கப்படும். ஆன்லைன் வழியே உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள், இந்நேரங்களில் செயல்படலாம்.

இதர மின் வணிக சேவை நிறுவனங்கள்; இனிப்பு மற்றும் காரவகை விற்கும் கடைகள், காலை 6:00 முதல், இரவு 9:00 மணி வரை இயங்கலாம்

* அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கும்

* அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும். ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தொடர்ந்து செயல்படலாம். இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

பள்ளி, கல்லூரி மற்றுமf பயிற்சி நிறுவனங்களில் நிர்வாக பணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.திரையரங்குளில் பராமரிப்பு பணிக்காக வாரம் ஒரு நாள் மட்டும் திறக்க அனுமதி.


latest tamil news


பஸ்கள் ஓடாத மேற்கண்ட 27 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இ-பாஸ் பெற்று தனியார் வாகனங்களில் பயணிக்கலாம்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் தளர்வுகளோடு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

அந்த மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளோடு பஸ்கள் இயங்கவும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த மாவட்டங்களில் 2000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
* குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் அவை தொடர்புடைய போக்குவரத்து, இ - பதிவு இல்லாமல் அனுமதிக்கப்படும்
* சிறார்களுக்கான கண்காணிப்பு, பராமரிப்பு சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர், இ - பதிவு இல்லாமல் அனுமதிக்கப்படுவர். அனைத்து வகையான கட்டுமானப் பணிகளும்அனுமதிக்கப்படும்
* அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும். சார் பதிவாளர் அலுவலகங்கள், முழுமையாக இயங்கும். அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்
* ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம். இதர தொழிற்சாலைகள் 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம்
* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோர், சேவை கோருவோர் வீடுகளுக்கு சென்று, பழுது நீக்கம் செய்ய, காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை, இ - பதிவுடன் அனுமதிக்கப்படுவர்

7 மணி வரை கடைகள்!
காலை 9:00 முதல், இரவு 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் விபரம்:இரண்டாம் பிரிவில் உள்ள 23 மாவட்டங்களில், மாலை 5:00 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், இரவு 7:00 மணி வரை செயல்படும்.
* இதுதவிர, பாத்திரக் கடைகள், பேன்சி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகள், சலவைக் கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள்; மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன
* சாலையோர உணவு கடைகளில் பார்சல் சேவை மட்டும், காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை அனுமதிக்கப்படும் * அழகு நிலையங்கள், சலுான்கள், குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை செயல்படலாம்
* காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை, விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்
* பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்படும்* திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேருடன் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்போர் அவசியம், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்
* திரையரங்குகளில் தொடர்புடைய தாசில்தார் அனுமதி பெற்று, வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஜூன்-202114:51:56 IST Report Abuse
g.s,rajan பேரூந்துகளை விடுங்கப்பா மொதல்ல ஐம்பது சதவீதம் நகர பேருந்துகள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஐம்பது சதவீதம் பேருந்துகளை இயக்க வேண்டும் ,மக்கள் தவியாயித்தவிக்கின்றனர் .பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக எகிறி இருப்பது வருமானமே இல்லாத சூழலில் வருமானம் குறியானது உள்ள சூழலில் சாதாரண அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் காரை பயன்படுத்த முடியாது ,செலவுகள் எங்கோ எகிறி வருவதால் பொது மக்கள் ரொம்பவே பீதி அடைந்து உள்ளனர் .
Rate this:
Cancel
N V VENKAT - Chennai,இந்தியா
21-ஜூன்-202111:35:42 IST Report Abuse
N V VENKAT TASMAC AND Registrar office are the main sources of income both for Govt and politicians So there are no restrictions there
Rate this:
Cancel
R PURUSHOTHAMAN - Arni,இந்தியா
21-ஜூன்-202111:15:29 IST Report Abuse
R PURUSHOTHAMAN Decision have been issued after due deliberations, hence no negative comments....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X