பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு மாவட்டங்களில் 2,000 பஸ்கள் இன்று இயக்கம்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், இன்று முதல் 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன.கொரோனா தொற்று குறைந்துள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், இன்று காலை 6:00 மணி முதல் பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி 50 சதவீத இருக்கைகளில் பயணியர் செல்லும் வகையில், 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, பஸ்களை தயார்படுத்தும் பணிகள் நேற்று
lockdown relaxation, Bus, TN lockdown

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், இன்று முதல் 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று குறைந்துள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், இன்று காலை 6:00 மணி முதல் பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி 50 சதவீத இருக்கைகளில் பயணியர் செல்லும் வகையில், 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, பஸ்களை தயார்படுத்தும் பணிகள் நேற்று நடந்தன.


கட்டுப்பாடுகள் என்ன?


• ஓட்டுனர், நடத்துனர், பயணிர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பயணியர், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்து, பின்படிக்கட்டில் ஏறி, முன் படிக்கட்டில் இறங்க வேண்டும்

• நடத்துனர்கள், எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது, 'ஏசி' பஸ்களை இயக்கக்கூடாது. இவை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


latest tamil newsஇதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'நாங்கள் 60 சதவீத சாதாரண பஸ்களுடன் 1,400 பஸ்களை இயக்க உள்ளோம்' என்றனர்.

விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:திருவள்ளூர், திருத்தணி, காஞ்சிபுரம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், செங்கல்பட்டு, கல்பாக்கம், கூவத்துார், கூடுவாஞ்சேரி, செங்குன்றம், ஆரம்பாக்கம், பொன்னேரி, ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு, முதற்கட்டமாக 250 பஸ்கள் இயக்கப்படும்.பின், படிப்படியாக 350 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
22-ஜூன்-202104:38:56 IST Report Abuse
g.s,rajan தமிழகத்தில் துக்ளக் ஆட்சி தான் நடைபெறுகிறது ,தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டும் என்றே கொரோனா பெயரைச் சொல்லி சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்தை தடை செய்து மக்களை பழி வாங்கும் செயலில் ஈடுபடுவது போல் தெரிகிறது ,இதற்குத்தான் மக்கள் திமுகவைத்த தேர்ந்து எடுத்தார்களா ???இதே நிலை தொடர்ந்தால் இன்னும் மோசம் ஆனால் மக்கள் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பேருந்துகளை இயக்கச் சொல்லி அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் இறங்குவார்கள் தமிழக அரசு .ஏன் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக் கொள்கிறதோ தெரியவில்லை ,இன்னும் வாட்டி விதைத்தால் ,மக்களின் சாபத்திற்கு அரசு ஆளாக நேரிடும் ,சாமானிய மக்கள் அன்றாடம் படும் பாடு அரசுக்குத் தெரியவில்லையா ???ஏன் மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்கள் இயக்கப்பட்டுக் கொண்டுதானே உள்ளது அங்கு கொரோனா பரவாதா ??ஏன் பேருந்துகளை ஐம்பது சதவீதப் பயணிகளுடன் ஐம்பது சதவீத பேருந்துகளை எல்லா மாவட்டங்களிலும் இயக்கலாமே ,மேலும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு அந்தச் சான்று வைத்திருக்கும் மக்களை பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கலாம் ,முற்றிலும் போக்குவரத்தை முடக்க வேண்டியதில்லை .மக்களின் பொறுமையை அரசு சோதித்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் .பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துக் கொ ண்டு இருக்கிறது ,மக்கள் சொல்லொணாத் துயரில் இருப்பதுஅரசுக்குத் தெரியவில்லையா ???அரசியல்வாதிகள் என்ன நடந்தா செல்கிறார்கள்??? ,மக்களின் கஷ்டம் அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது ?? ,பெட்ரோல் மற்றும் டீசல் என்ன விலை விற்றால் அவர்களுக்கு என்ன ,சொந்தக் காசில் பெட்ரோல் டீசல் போட்டு ஓட்டிப் பார்த்தால் தான் அந்த அருமை அவர்களுக்குத் தெரியும் ,எல்லாம் ஓசியில் கிடைக்குது ,சும்மா ஜாலியா ஓசியில எரிபொருள் கிடைப்பதால் சொகுசுக்கார்களில் நிறையா எரிபொருள் போட்டுக்கிட்டு சுற்றம் புடை சூழ வீதிகளில் பல கார்கள் பின் தொடர உல்லாச உலா வருகின்றனர் , சாது மிரண்டால் காடு கொள்ளாது மக்களின் கோபம் வெடிக்கும் .பாத்துக்குங்க , ஜி.எஸ்.ராஜன் சென்னை ..
Rate this:
Cancel
21-ஜூன்-202107:13:47 IST Report Abuse
இறைவி நோய்த்தொற்று 385 மற்றும் 455 இருக்கும் செங்கல்பட்டு சென்னையில் பேருந்து ஓட அனுமதி. நோய்த்தொற்று 370 இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் ஹார்ட்வேர் போன்ற கடைகளை குறிப்பிட்ட நேரம் கூட திறக்க அனுமதியில்லை. என்ன இது????
Rate this:
Cancel
21-ஜூன்-202107:03:27 IST Report Abuse
சந்திரசேகர் பஸ் போக்குவரத்து இல்லாத மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு கொண்டாட்டம்தான். என் வீட்டில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனை போக வேண்டிய நிர்ப்பந்தம் மருத்துவமனை சென்று வர போக 7 கி.மீ வர 7 கி.மீ ஆக மொத்தம் 14 கி.மீ. அவர்கள் கேட்ட தொகை 500 ரூபாய். கோரோனா வருவதற்கு முன் பஸ் அல்லது ஆட்டோவுக்கு போய் வர 20 மட்டும். ஏனென்றால் சவாரியாகத்தான் வர முடியும் என்று காரணம் கூறினார்கள். ஆட்டோவுக்கு 500 டாக்டருக்கு 200 மருந்து செலவு குறைந்த பட்சம் 500 ஆக 1200 செலவு.இப்போது அதிமுக்கியமில்லாத உடல் பிரச்சனைக்கு வீட்டிலேயே ஏதாவது நாட்டு வைத்தியம் செய்து இருக்க வேண்டிய சூழ்நிலை.இதில் யாரை குறை சொல்வது. எல்லாம் விதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X