நான்கு மாவட்டங்களில் 2,000 பஸ்கள் இன்று இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு மாவட்டங்களில் 2,000 பஸ்கள் இன்று இயக்கம்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், இன்று முதல் 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன.கொரோனா தொற்று குறைந்துள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், இன்று காலை 6:00 மணி முதல் பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி 50 சதவீத இருக்கைகளில் பயணியர் செல்லும் வகையில், 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, பஸ்களை தயார்படுத்தும் பணிகள் நேற்று
lockdown relaxation, Bus, TN lockdown

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், இன்று முதல் 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று குறைந்துள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், இன்று காலை 6:00 மணி முதல் பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி 50 சதவீத இருக்கைகளில் பயணியர் செல்லும் வகையில், 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, பஸ்களை தயார்படுத்தும் பணிகள் நேற்று நடந்தன.


கட்டுப்பாடுகள் என்ன?


• ஓட்டுனர், நடத்துனர், பயணிர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பயணியர், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்து, பின்படிக்கட்டில் ஏறி, முன் படிக்கட்டில் இறங்க வேண்டும்

• நடத்துனர்கள், எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது, 'ஏசி' பஸ்களை இயக்கக்கூடாது. இவை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


latest tamil newsஇதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'நாங்கள் 60 சதவீத சாதாரண பஸ்களுடன் 1,400 பஸ்களை இயக்க உள்ளோம்' என்றனர்.

விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:திருவள்ளூர், திருத்தணி, காஞ்சிபுரம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், செங்கல்பட்டு, கல்பாக்கம், கூவத்துார், கூடுவாஞ்சேரி, செங்குன்றம், ஆரம்பாக்கம், பொன்னேரி, ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு, முதற்கட்டமாக 250 பஸ்கள் இயக்கப்படும்.பின், படிப்படியாக 350 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X