பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசிக்கு ஓடி ஒளியும் பழங்குடியினர்; இரவில் சென்று ஊசி போடும் செவிலியர்கள்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
பந்தலுார்: பந்தலுார் பகுதி வனப்பகுதிகளில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் தடுப்புசிக்கு பயந்து ஓடி ஒளியும் நிலையில், இரவிலும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகாவில் குரும்பர், பனியர், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். 'இவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்,' என,
பந்தலூர், தடுப்பூசி, பழங்குடியினர், பயம், செவிலியர்கள்

பந்தலுார்: பந்தலுார் பகுதி வனப்பகுதிகளில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் தடுப்புசிக்கு பயந்து ஓடி ஒளியும் நிலையில், இரவிலும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகாவில் குரும்பர், பனியர், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். 'இவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்படுகிறது. அதில், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் மருத்துவ குழுவினரை கண்டால், வனத்தில் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இதனால், பகல் நேரங்களில் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிகிறது.


latest tamil news


இந்நிலையில், உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உட்பட்ட குன்றில் கடவு, எருமை குளம், பைதல் கடவு, படிக்கன் வயல் உள்ளிட்ட பகுதிகளில், டாக்டர் அனுசுயா தலைமையில், செவிலியர் தமிழரசி மற்றும் ஆஷா பணியாளர்கள் மாலைநேரத்தில் முகாமிட்டு இரவு, 9:00 மணி வரை பழங்குடியினருக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்பவர்கள் இரவில் வீடுகளுக்கு வந்து ஆக வேண்டிய சூழலில் சுகாதார துறையினர் காத்திருந்து தடுப்பூசி போடுகின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில், மருத்துவ குழுவினரின் சேவை பணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை, in பெங்களுர் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை
Rate this:
Cancel
22-ஜூன்-202109:09:54 IST Report Abuse
மு.செந்தமிழன் நான் சிறுவயதாக இருந்த போது பொது சுகாதார துறை அலுவலர்கள் எனது கிராமத்திற்கு வந்தால் ஊரில் இருக்கும் ஆண்கள் வயல் வெளிகளில் தலை தெறிக்க விழுந்தடிச்சு ஓடுவர். விபரம் தெரியாத அந்த வயதில் நானே நிறைய பேரை வண்டி வருகிறது என சொல்லி ஓட வைத்திருக்குறேன், விசயம் என்னவென்றால் ஆண்களுக்கு கு.க செய்ய அவர்கள் வற்புறுத்துவர். ஆனால் ஊரில் இருக்கும் ஆண்களோ நாய் மற்றும் காளை மாடுகளை போல் தமது ஆணுறுப்பு விதைகளை நசுக்கி விடுவார்கள் என பயந்து ஓடுவர். ஒரு காலத்தில் அவ்வளவு வெள்ளெந்தியாக இருந்திருக்கிறது எனது கிராமம்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் உத்தர பிரதேசத்தில், பீகாரில் கிராம மக்கள் ஊசிக்கு பயந்து ஓடிப்போய் ஆற்றில் குதித்து தப்பிப்பதாக செய்திகள் வந்ததே காலங்காலமாக தடுப்பூசியை பற்றி சிறு குழந்தைகளை பயங்காட்டி வளர்த்துள்ளோம் இதோ பார் அண்ணன் சாப்பிட்டு விட்டான் சீக்கிரம் சாப்பிடு என்றும் நீ ஸமர்த்தா அசடான்னு கேட்டும் போட்டி மனப்பான்மையை ஊட்டி வளர்த்துள்ளோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X