உண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் மோடி இல்லையே...

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்தை மீட்டு, இந்தியர்களுக்கு, தலா 15 லட்ச ரூபாய் வழங்குவேன் என, பிரதமர் மோடி கூறினார். ஆனால், அவ்வாறு செய்ய வில்லை. மாறாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டிபாசிட், 286 சதவீதம் உயர்ந்துள்ளது.- தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா'உண்மை தான். ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே; பிரதமர் மோடி இல்லையே...' என கூறத் தோன்றும் வகையில்,
உண்மைதான் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே. பிரதமர் மோடி இல்லையே...

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்தை மீட்டு, இந்தியர்களுக்கு, தலா 15 லட்ச ரூபாய் வழங்குவேன் என, பிரதமர் மோடி கூறினார். ஆனால், அவ்வாறு செய்ய வில்லை. மாறாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டிபாசிட், 286 சதவீதம் உயர்ந்துள்ளது.
- தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா


'உண்மை தான். ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே; பிரதமர் மோடி இல்லையே...' என கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை.பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் தொடர்ச்சியாக, பா.ஜ., நிர்வாகிகளை குறிவைத்து பொய் வழக்கு போடுவது, மிரட்டுவது என்பது, தி.மு.க., ஆட்சி அமைந்தது முதல் துவங்கி உள்ளது. முதல்வர் உடனே தலையிட்டு, காவல் துறையின் சட்ட விரோத நடைமுறையை நிறுத்த வேண்டும்.
- தமிழக பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத்


'சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால், இப்படித் தான் நடவடிக்கை எடுப்பர் என்பதை இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள். சமூக வலைதளங்கள் ஆபத்தானவை...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத் அறிக்கை.தமிழகத்தில் இனி மக்கள் நல்வாழ்வுத் துறையில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் கிடையாது. நேரடி நியமனங்கள் மூலமாகத் தான் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்


'நல்ல முடிவு, வரவேற்கத் தக்கது. சுகாதாரம் வலுவாக இருந்தால் தான் எதிர்வரும் தொற்றுகளை சமாளிக்க முடியும்...' என, கூறத் தோன்றும் வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால், நாடு முழுதும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. கோடிக்கணக்கான தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில், இரண்டு நிறுவனங்களை மட்டுமே நம்பியுள்ளது. தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்


latest tamil news
'இதில் மாநில அரசின் செயல்பாடும் உள்ளது. எனவே, அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை சாடுகிறீர்களோ...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி.போராட்ட நாட்கள், தற்காலிக பணி நீக்க நாட்களை, பணி நாட்களாக கருதி முறைப்படுத்தியும், பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்தும், முன் பணியாற்றிய இடத்திலேயே மீண்டும் பணி ஆணை வழங்க வேண்டும்.
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலர் மயில்


'போராட வேண்டியது... அதன் பின், இப்படி கெஞ்ச வேண்டியது... எதற்கு சார் இதெல்லாம்... மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் நடத்துங்க சார்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலர் மயில் அறிக்கை.தெலுங்கானா மாநிலத்தில் கொஞ்சம் பேருக்குத் தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளன. 'மால்'கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. சில இளைஞர்கள் முக கவசத்தை கூட துாக்கி எறிந்துள்ளனர்.
- நடிகை கஸ்துாரி


'கொரோனா என்ற கொடூரன் மீதான பயம் போய்விட்டது போலும். மேலும், எத்தனை காலத்திற்கு தான் அந்த தொற்றுக்கு பயப்பட முடியும். துணிந்தவர்களுக்கு துக்கம் இல்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகை கஸ்துாரி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூன்-202108:05:22 IST Report Abuse
ஆப்பு இல்லாத கருப்புப் பணத்தை இருக்கு, அதை நூறே நாளில் சுவுஸ் வங்கியிலிருந்து கொண்டாந்தால், ஆளுக்கு 15 லட்சம் போடற அளவுக்கு இருக்கும்னு தப்பு தப்பா அடிச்டு உட்டு, பதவிக்கு வந்தவர்கள் ஏமாற்றுக்காரர்கள் இல்லை... கருப்பு பணம்னா ஏதோ டீ விக்கிறது மாதிரி நினச்சுட்டாங்க.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
22-ஜூன்-202102:29:42 IST Report Abuse
Raj அரசு ஆசிரியர்களின் சம்பளத்தை 3 மாதம் பிடித்தம் செய்யணும் . பணியிட மாற்றத்துக்கு இந்த பாவிகள் கொடுக்கும் லஞ்சம் கணக்கில் அடங்காது . உழைக்கிற சோறு உடம்பில் ஓட்டும் என்பர் . எப்படி வேலை செயல் சம்பளம் கேக்க மனசு வருதோ ? பேருந்து இரண்டு ஆசிரியர்கள் பயணித்தால் அவர்கள் உரையாடல் பிச்சை எடுத்து மனநிறைவோடு பிழைக்கும் மக்களை விட கேவலமாக இருக்கும்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஏமாற்றுபவர்கள் நம்மவர்கள் தானே பிரதமர் மோடி இல்லையே ஆமா லண்டனில் அந்த ரெண்டு (கே) மோடிகள், மல்லையா, மட்டுமல்ல தீவுக்கு தீவு தாவுபவர் எல்லாம் தமிழ்நாட்டு காரர்கள்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X