பொது செய்தி

தமிழ்நாடு

"எளிமையான வாழ்க்கை வாழுங்கள் ஊழலை அகற்றலாம்" - சட்டசபையில் கவர்னர் உரை

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
சென்னை : தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் இன்று முதல் சட்டசபை கூட்டம் காலை துவங்கியது. கலைவாணர் அரங்கத்தில் நடந்த இன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். உரையை துவக்கியதும் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு செய்தியை சபையில் எடுத்துரைத்தார்.கவர்னர் உரையில் அவர் கூறியதாவது:அனைவருக்கும் வணக்கம் ! எளிமையான வாழ்க்கை வாழுங்கள் இது

சென்னை : தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் இன்று முதல் சட்டசபை கூட்டம் காலை துவங்கியது. கலைவாணர் அரங்கத்தில் நடந்த இன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். உரையை துவக்கியதும் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு செய்தியை சபையில் எடுத்துரைத்தார்.



latest tamil news



கவர்னர் உரையில் அவர் கூறியதாவது:
அனைவருக்கும் வணக்கம் ! எளிமையான வாழ்க்கை வாழுங்கள் இது ஊழலை அகற்றி விடும். இது எனது செய்தி. தமிழ் இனிய மொழி. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் ! முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து 3 ஆண்டுகளில் திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது. தமக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பாரபட்சமின்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது.


latest tamil news



சமத்துவம், சமூக நீதிக்காக திமுக அரசு பாடுபட்டு வருகிறது. மாநில உரிமைகளை திமுக தொடர்ந்து பாதுகாக்கும். மத்திய அரசுடன் இந்த அரசு இணக்கமாக செயல்படும். தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார்.


சபாநாயகர் வரவேற்பு


சட்டசபைக்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கவர்னரை வரவேற்றனர். தொடர்ந்து கவர்னரை சட்டசபை மரபுப்படி அழைத்து வந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
22-ஜூன்-202113:37:07 IST Report Abuse
சோணகிரி சபரீசன் செந்தாமரையைப் பார்த்து எளிமையை கற்றுக்கொள்ள வேண்டும்... அப்படித்தானே... மாறன் சகோதரர்களைப்பார்த்து எளிமையை கற்றுக்கொள்ளவேண்டும்... அப்படித்தானே...
Rate this:
Cancel
22-ஜூன்-202108:02:28 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் எளிமையா வாழணும். ஆனா, இவுரு மட்டும் சின்னஞ்சிறு ராஜ்பவனில் அரசாங்க ஓய்வில் ஒரு 50 அறைகள் உள்ள சிறு குடிசையில் வாழுவார். சௌக்கிதாரால் நியமனம் ஆனவர். நீடூழி வாழ்க எசமான்.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
22-ஜூன்-202107:55:53 IST Report Abuse
M S RAGHUNATHAN வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு எழுதப் பட்ட வாசகங்களை கவர்னர் படிக்க மறுத்ததால் அவ்வாசகங்கள் நீக்கப்பட்டன. இதற்கு எதிராக நம் மெத்தப் படித்த ஒன்றாத நிதி அமைச்சர் சட்ட சபையில் உரிமை பிரச்சினை கொண்டு வருவாரா ? அல்லது எதிர்த்து பதவியை ராஜினாமா செய்யப் போகிறரா. ஸ்டாலின் அவர்களின் மௌனம் ஏன் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X